ஃபோட்டோ முக்கியம் அண்ணே: மாஸ் காட்டும் மணப்பெண்ணின் வைரல் வீடியோ

Funny Bride Video: மணமகள் புகைப்படக் கலைஞரிடம் தனக்கு விருப்பமான புகைப்படத்தை விருப்பமான இடத்தில் எடுக்குமாறு தடாலடியாக கூறுவதை வீடியோவில் காண முடிகின்றது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : May 10, 2022, 04:48 PM IST
  • இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம்.
  • இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம்.
  • வீடியோவில் படு மாஸாக தோரணை காட்டும் மணமகளை காண முடிகிறது.
ஃபோட்டோ முக்கியம் அண்ணே: மாஸ் காட்டும் மணப்பெண்ணின் வைரல் வீடியோ title=

வைரல் வீடியோ: இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம்.

இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. 

சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. சமீப காலங்களில் திருமண வீடியோக்கள் பட்டையை கிளப்பி வருகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தை கலக்கி வருகின்றது.

இந்திய திருமணங்கள் அழகானவை, வண்ணமயமானவை. பாரம்பரியம், இசை, நடனம் மற்றும் காதல் நிறைந்தவை. அழகியலுக்கு இந்திய திருமணமும் ஒரு அற்புதமான உதாரணம். இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்ட ஒரு மணப்பெண்ணின் திருமண வீடியோ வைரலாகி வருகிறது. 

இந்த வீடியோவில், படு மாஸாக தோரணை காட்டும் மணமகளை காண முடிகிறது. மணமகள் புகைப்படக் கலைஞரிடம் தனக்கு விருப்பமான புகைப்படத்தை விருப்பமான இடத்தில் எடுக்குமாறு தடாலடியாக கூறுவதை வீடியோவில் காண முடிகின்றது. அப்படி செய்யவில்லை என்றால், சம்பளம் குறைக்கப்படும் என்றும் மணமகள் புகைப்படக் கலைஞரை மிரட்டுகிறார்.

மேலும் படிக்க | மணமகளின் வேற வெவல் மாஸ் எண்ட்ரி: முகத்தில் அப்பட்டமான மகிழ்ச்சி, வைரல் வீடியோ 

வைரலாகும் இந்த வீடியோ-வில், முழு அலங்காரத்துடன் ஒரு மணப்பெண்ணை காண முடிகின்றது. அவர் மணமேடைக்கு செல்ல தயாராக உள்ளார். அப்போது புகைப்படக் கலைஞரிடம் ஒரு பிரத்யேக புகைப்படம் ஒன்றை எடுக்குமாறு அவர் கேட்கிறார். மணமகள் புகைப்படக் கலைஞரிடம் தனது விருப்பப்படி புகைப்படம் எடுக்கச் சொல்கிறார். ஒரு குறிப்பிட்ட இடத்தில் தனது புகைப்படத்தை எடுக்க வேண்டும் என்று மணப்பெண் கூறுகிறார். 

புகைப்படக் கலைஞர் அப்படி செய்யவில்லை என்றால், அவரது சம்பளம் குறைக்கப்படும் என்றும் அவர் அச்சுறுத்துகிறார். அடாவடி மணமகள் புகைப்படக் கலைஞரைக் கலங்கடிக்கும் அந்த அழகான ஸ்டைலை நெட்டிசன்கள் மிகவும் விரும்புகின்றனர். 

மணப்பெண்ணின் மாஸ் ஸ்டைலை இந்த வீடியோவில் காணலாம்:

இந்த வீடியோ பல தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை ட்விட்டர், யூடியூப், இன்ஸ்டாகிராம் ஆகிய தளங்களில் மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர். மணமகளின் வேடிக்கையான பாணியை மக்கள் மிகவும் விரும்புகிறார்கள். இந்த வீடியோவை இதுவரை ஆயிரக்கணக்கானோர் பார்த்து லைக் செய்துள்ளனர். அதே நேரத்தில், கமெண்ட் பிரிவில் பல சிரிப்பு எமோஜிகளையும் காண முடிகின்றது. 

மேலும் படிக்க | Viral Video: அப்பா என்ன வெயிலு... நீர்நாய்களின் பனிக்கட்டி குளியல் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News