‘ஏம்மா...ஆவி கீவி புகுந்துடுச்சா?’: சமையலறையில் பெண் ஆடிய பேய் நடனம், வைரல் வீடியோ
Funny Viral Video: பெண்ணின் நடனத்தை பார்த்து ஒரு பயனர், ‘இவர் உடலில் யாருடைய ஆவியோ புகுந்து விட்டது’ என எழுதியுள்ளார். மற்றொருவர், ‘இந்த அக்கா தப்பான இடத்துல் தடுப்பூசி போட்டுக்கிட்டாங்க’ என கிண்டல் செய்துள்ளார்.
வைரல் வீடியோ: இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம். இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன. சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. இவற்றைக் கண்டு நெட்டிசன்கள் தங்கள் மன அழுத்தங்களை மறந்து ரசித்து சிரிக்கின்றனர். இவற்றில் நடன வீடியோக்களும் அடங்கும்.
நடனம் என்பது ஒருவரின் உணர்வுகளை வெளிப்படுத்தும் தனித்துவமான வழியாகும். சிலர் பலரும் பார்க்க நடனமாடுகிறார்கள், சிலரோ யாருக்கும் தெரியாமல் ஆடுகிறார்கள். நடனம் ஆடத் தெரிந்தவர்கள் ஏதாவது ஒரு வடிவில் தங்கள் திறமையை வெளிப்படுத்துவார்கள். திருமணங்கள், பல வித நிகழ்ச்சிகள், மேடைகள் என பலர் பல இடங்களில் நடனமாடுவதுண்டு. ஆனால், யாரும் எதிர்பாராத ஒரு இடத்தில் ஒரு பெண் ஆடிய வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளது.
ஒரு பெண்ணுக்கு நீண்ட நாட்களுக்கு பிறகு தனியாக சில தருணங்கள் கிடைக்கின்றன. அதை கொண்டாட, அவர் சமையலறையில் நடனமாடத் தொடங்குகிறார். அதுவும் சாதாரண நடனம் அல்ல, வேற லெவல் நடனம்!! அவரது நடன அசைவுகள் காண்பவர்களை வியக்க வைக்கிறது. நடனத்தின் போது அவர் காட்டும் முக பாவங்களும் தனித்துவமாக இருக்கின்றன. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பல்வேறு தளங்களில் வைரலாகி வருகிறது.
மேலும் படிக்க | வீட்டின் முன் காற்றில் திடீரென பறந்த பெண்: உங்க கண்ணையே நம்ப முடியாது, வைரல் வீடியோ
பெண்ணின் வேற லெவல் நடனம்
இந்த வீடியோவில் பெண் சமையலறைக்குச் சென்று கதவை மூடிவிட்டு மியூசிக்கை ஆன் செய்து நடனமாடத் தொடங்குவதை காண முடிகின்றது. இவர் காட்டும் முக பாவங்களை நீங்கள் இதுவரை எந்த நடனத்திலும் பார்த்திருக்க முடியாது. வீடியோவில், அவர் வேறு லெவலில் நடனமாடுவதைக் காண முடிகின்றது.
சும்மா அதிர வைக்கும் பெண்ணின் எக்ஸ்பிரெஷன்:
பெண்ணின் நடனத்தை பார்த்து சமூக வலைதளவாசிகளும் தங்களது கமெண்டுகளை அளித்து வருகின்றனர். இந்த வீடியோ ghantaa என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன.
ஒரு பயனர், ‘இவர் உடலில் யாருடைய ஆவியோ புகுந்து விட்டது’ என எழுதியுள்ளார். மற்றொருவர், ‘இந்த அக்கா தப்பான இடத்துல் தடுப்பூசி போட்டுக்கிட்டாங்க’ என கிண்டல் செய்துள்ளார். மொத்தத்தில் இந்த வீடியோவை பார்த்தால், ஒரு வித்தியாசமான, வேடிக்கையான வீடியோவை பார்த்த திருப்தி கிடைக்கிறது.
மேலும் படிக்க | வகுப்பறையில் மாணவன் மாணவி செய்ய வேண்டிய செயலா இது: வீடியோ வைரல்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ