சிறுத்தையின் சீற்றம் இப்படித்தான் இருக்குமா? பார்ப்பவரை பதறச் செய்யும் வீடியோ

Cheetah Atrocity Video Viral: குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்து அட்டகாசம் செய்யும் சிறுத்தையின் வீடியோ வைரலாகிறது... சிறுத்தையின் சீற்றம் இப்படித்தான் இருக்குமோ என்று பார்ப்பவரை பதறச் செய்யும் வீடியோ

Written by - Malathi Tamilselvan | Last Updated : Sep 21, 2022, 02:47 PM IST
  • சீறி வரும் சிறுத்தையின் தாக்குதல் எப்படி இருக்கும்?
  • இந்த வீடியோவைப் பார்த்தால் சிறுத்தையின் ஒன்றரை டன் வீரிய அடியின் தாக்கம் புரியும்
  • குடியிருப்புப் பகுதிக்குள் வந்து மாட்டிக் கொண்ட சிறுத்தையின் சீற்றம்
சிறுத்தையின் சீற்றம் இப்படித்தான் இருக்குமா? பார்ப்பவரை பதறச் செய்யும் வீடியோ title=

வைரல் வீடியோ:  அச்சு ஊடகம், தொலைகாட்சி, வீடியோ, டிஜிட்டல், மொபைல் என செய்தி ஊடகங்களும் காலத்திற்கு ஏற்ப பரிணாம வளர்ச்சி அடைந்து வருகின்றன. அதிலும், தற்போது அனைவரின் கைகளிலுமே உலகம் அடங்கிவிட்டது என்று சொல்லும் அளவுக்கு, மொபைல் போன்களின் வீச்சு இருக்கிறது. ஊடகங்களில் செய்தி மட்டுமே பிரதானமாக இருந்த காலகட்டங்கள் மாறிவிட்டன. மொபைல் போன்களின் வீச்சினால், சமூக ஊடகங்களில் உடனுக்குடன் செய்திகள் வந்துவிடுகின்றன. அதிலும் வீடியோ செய்திகள் அதிகமாக விரும்பப்படுகின்றன. இணையத்தில் நாம் பார்க்கும் பலவித வீடியோக்களில், சில பரவசப்படுத்தினாலும், பல அச்சமூட்டுகின்றன. சமூக ஊடகங்களில் பகிரப்படும் வீடியோக்களில் விலங்குகளின் குறும்பை ரசிக்க ரசிகர் பட்டாளமே உள்ளது.

விலங்குகளின் வீடியோக்கள் அனைவராலும் பார்த்து விரும்பி ரசிக்கப்படுகின்றன என்பதற்கான காரணம் என்னவாக இருக்கும்? அன்றாட வாழ்க்கையில் நாம் காண முடியாத பல விஷயங்களையும் வீடியோக்கள் மூலம் பார்க்கிறோம். நினைத்துப் பார்க்க முடியாத விலங்குகளின் அரிய தாக்குதல்களின் வீடியோக்கள் வைரலாகின்றன. விலங்குகளின் குறும்புத்தனமும் அப்பாவித்தனமும் மட்டுமே வைரலாகுமா என்ன?  

மேலும் படிக்க | சிங்கிளாக வந்து சிங்கக்கூட்டத்தை சிதறடிக்கும் ஆக்ரோஷமான விலங்கு 

அச்சமூட்டுவதாகவே சிறுத்தையின் தாக்குதல் வீடியோ வைரலாகிவருகிறது. பலம் வாய்ந்த விலங்கு சிறுத்தை, அது வேட்டையாடுவதில் கில்லாடி என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். ஆனால், இந்த வீடியோவை நாம் சுலபமாக கடந்துவிட முடியாது என்பதால், இந்த வீடியோ இணையத்தில் வைரலாகிறது. 

சமூக ஊடகங்களில் வைரலாகும் இந்த வீடியோவில், சீற்றத்துடன் ஓடி வந்து, தன்னை பிடிக்க வரும் மீட்பு அதிகாரியையும் தாக்கி துரத்துகிறது சிறுத்தை. குடியிருப்புப் பகுதியில் தவறி புகுந்துவிட்ட சிறுத்தையை மீட்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் மீட்புப் பணியில் ஈடுபட்டவருக்கு நிகழ்ந்த அனுபவம் நம்மையும் பயப்படுத்துகிறது.  

மேலும் படிக்க | என்னை பிளான் பண்ணி சிக்க வைச்சிட்டீங்களே! சீறும் முதலையை வேட்டையாடும் இளைஞர்

சீறும் சிறுத்தையின் தாக்குதலில் அலறி சாயும் மீட்புப் பணியாளரை விட்டு விட்டு, அது வேறு இடத்தில் பாய்கிறது. ஆங்காங்கே நின்று வேடிக்கைப் பார்க்கும் மக்களும் தெறித்து ஓடுகின்றனர். சீறும் சிறுத்தையின் தாக்குதலுக்குள் அகப்பட்டால், அவர்களை யாரால் காப்பாற்ற முடியும்?என்ற பயமே காரணம். இந்த சிறுத்தை வீடியோ  சமூக வலைதளங்களில் வைரலாகிறது. வைரல் வீடியோ உங்களுக்காக...

சிறுத்தை மிகவும் வீரியமான தாக்குதல் நடத்தும்போது, அவற்றை யாராலும் எதிர்கொள்ள முடிவதில்லை. தவறுதலாக மக்கள் வசிக்கும் பகுதிக்குள் வந்துவிட்ட சிறுத்தை என்ன செய்வது என்று தெரியாமல் அங்கும் இங்கும் ஓடுகிறது. முன்னால் வருபவர்களைத் தாக்குகிறது.

மேலும் படிக்க | பாய்ந்து வந்து கட்டிக்கொண்ட பெண் சிங்கம்: பாசமா, பகையா? வியக்க வைக்கும் வைரல் வீடியோ

விலங்குகளின் தாக்குதல் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் என்பதைக் காட்டும் இந்த வீடியோவில், திடீரென எதிர்பாராத நேரத்தில் ஓடிச் சென்று தாக்கும் சிறுத்தையின் வேகமும், சீற்றமும் அச்சத்தைக் கொடுக்கிறது. தாக்குதலுக்கு உள்ளான அதிகாரிக்கு என்ன ஆயிற்று என்ற கவலையும் எழுகிறது.

இதுபோன்ற விலங்குகளின் தாக்குதல் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி சக்கைப்போடு போடுகின்றன. தன்னை பாதுகாக்க வந்திருப்பவர் என்று புரியாமல் சிறுத்தை ஓங்கி அடித்தால், பாவம் காப்பாற்ற வந்தவர் என்ன செய்வார்?

மேலும் படிக்க | துள்ளி குதிக்கும் கன்றுக்குட்டியின் வைரல் வீடியோ! குட்டிக் கன்றின் சுட்டித்தனம்

மேலும் படிக்க | பாய்ந்து வந்து மானை தாக்கும் சிங்கம்! தப்ப முடியாமல் கதறும் காட்டு மான்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News