வைரல் வீடியோ:இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம். இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன.  சமீபத்திய நாட்களில் நம் கண்களையே நம்ப முடியாத அளவுக்கு பல விசித்திர வீடியோக்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஒரு நபர் காற்றில் மிதப்பதையோ, அல்லது மிதந்தபடி ஓர் இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு செல்வதையோ நாம் திரைப்படம், தொலைக்காட்சி, அல்லது வலைத் தொடர்களில்தான் பார்த்திருக்கிறோம். ஆனால் தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ள வீடியோவில், இது போன்ற ஒரு காட்சியை காண முடிகின்றது. ஒரு பெண் காற்றில் தொங்கிக்கொண்டு இருப்பதை இந்த வீடியோவில் காண முடிகின்றது.


இதை அங்கு அருகில் இருப்பவர்களாலும் நம்ப முடியவில்லை. அவரைப் பார்க்க அருகில் இருந்து மக்கள் கூடினர். இந்த செயலை அந்தப் பெண் எப்படிச் செய்தார் என்பது இப்போது விவாதப் பொருளாகவே உள்ளது. இந்த வீடியோ அமெரிக்காவில் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், அங்கு சிலர், இப்போதே ஹாலோவீனுக்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அந்த ஏற்பாடுகளில் ஒரு அங்கமாகவும் இது இருக்கலாம். எப்படி இருந்தாலும் இந்த வீடியோ காண்பவர்களை வியக்க வைக்கிறது. 


மேலும் படிக்க | மணமகள் போட்ட குத்தாட்டம்: கட்டுப்படுத்த முடியாமல் மணமகன் செய்த வேலை, வைரல் வீடியோ 


காற்றில் தொங்கும் பெண்


சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில், எந்த வித பிடிமானமும் இன்றி, ஒரு பெண் காற்றில் தொங்கிக் கொண்டிருப்பதை காண முடிகின்றது. அவர் இரண்டு கைகளையும் விரித்து, அதே இடத்தில் குதிகாலின் துணை கொண்டு காற்றில் நிற்கிறார். ஹாலோவீன் வருவதற்கு இன்னும் பல நாட்கள் உள்ளன. இந்த முறை ஹாலோவீனின் கருப்பொருள் அதாவது தீம், Netflix இன் பிரபலமான இணையத் தொடரான ​​ஸ்ட்ரேஞ்சர் திங்ஸை அடிப்படையாகக் கொண்டது. இதை மனதில் வைத்து இவர் இப்படிப்பட்ட செயலை செய்துள்ளாரோ என்ற எண்ணம் பலருக்கு உள்ளது. 


காற்றில் மிதக்கும் பெண்ணின் வீடியோவை இங்கே காணலாம்: 



பெண் காற்றில் ஆடும் இந்த வீடியோவை முதலில் சமூக ஊடக தளமான Tiktok இல் டேவ் மற்றும் ஆப்ரே சமீபத்தில் பகிர்ந்துள்ளனர். இங்கிருந்து மீண்டும் அது பல்வேறு தளங்களில் வைரலானது. இதுவரை இந்த வீடியோ 1.5 லட்சத்திற்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டுள்ளது. இந்த வீடியோவுக்கு நெட்டிசன்களும் பல விதமான கமெண்டுகளை அளித்து வருகிறார்கள்.


இந்த வீடியோவை எப்படி ஆராய்ந்து பார்த்தாலும், அந்த பெண் இப்படி எப்படி நிற்கிறார் என்ற வியப்பே மேலோங்குகிறது. அந்த பெண்ணுக்கு எந்த விதமான பிடிமானம் இருப்பதையும் இந்த வீடியோவில் காண முடியவில்லை. 


மேலும் படிக்க | Viral Video: சூப்பர் மார்கெட்டில் ஷாப்பிங் செய்த கரடி; கடைக்குள் புகுந்து அட்டகாசம்! 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ