மணமகள் போட்ட குத்தாட்டம்: கட்டுப்படுத்த முடியாமல் மணமகன் செய்த வேலை, வைரல் வீடியோ

Funny Wedding Video: மணமகளின் உற்சாகத்தை பார்த்து மணமகனுக்கும் உற்சாகம் தொற்றிக்கொள்கிறது. அவரும் மணமகளுடன் சேர்ந்து நடனமாடத் தொடங்குகிறார். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Sep 20, 2022, 06:21 PM IST
  • சமூக ஊடகங்களில் திருமணம் தொடர்பான லட்சக்கணக்கான வீடியோக்கள் உள்ளன.
  • இதில் பல வித வேடிக்கையான நிகழ்வுகளையும் நாம் காண்கிறோம்.
  • சில சமயங்களில் திருமண மேடையிலேயே மணமகனும், மணமகளும் செய்யும் சில வேலைகளால் சிரிப்பை அடக்க கூட முடியாமல் போகிறது.
மணமகள் போட்ட குத்தாட்டம்: கட்டுப்படுத்த முடியாமல் மணமகன் செய்த வேலை, வைரல் வீடியோ title=

வைரல் வீடியோ: சமூக ஊடகங்களில் திருமணம் தொடர்பான லட்சக்கணக்கான வீடியோக்கள் உள்ளன. இதில் பல வித வேடிக்கையான நிகழ்வுகளையும் நாம் காண்கிறோம். சில சமயங்களில் திருமண மேடையிலேயே மணமகனும், மணமகளும் செய்யும் சில வேலைகளால் சிரிப்பை அடக்க கூட முடியாமல் போகிறது. பல நேரங்களில் யாரும் எதிர்பார்க்காத பல விஷயங்களும் மணமேடையிலேயே நடந்துவிடுகின்றன. திருமணத்துக்கு வந்துள்ள விருந்தினர்களை அதிச்சிக்குள்ளாக்கும் பல சம்பவங்கள் நடக்கின்றன. இவை இணையத்தில் பகிரப்பட்ட பின்னர் இணையவாசிகளையும் ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றன.

சில திருமணங்களில், மணமகனும், மணமகளும் மிகவும் கூச்சத்துடன் காணப்படுவார்கள். சில திருமணங்களில் மிகுந்த குதூகலத்துடன் அனைத்து சடங்குகளையும் செய்வார்கள். இவை அனைத்தும் காண மிக அழகாகவும், சில வேடிக்கையாகவும் இருக்கும். மொத்தத்தில், திருமணம் தொடர்பான வீடியோக்கள் வந்தவுடனேயே சமூக வலைதளங்களில் சலசலப்பை ஏற்படுத்துகின்றன. 

தற்போது மீண்டும் மணப்பெண் தொடர்பான வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் வித்தியாசமான ஸ்டைலில் மணப்பெண் திருமண நடனமாடி கலக்கியுள்ளார். சில சமயம் மேள தாளத்துக்கு ஏற்றவாறும் சில சமயம் வாயில் ரூபாய் நோட்டுகளை அடக்கிக்கொண்டும் அவர் நடனமாடுவது பார்ப்பதற்கு மிகவும் வேடிக்கையாக உள்ளது. 

மேலும் படிக்க | கண் கலங்க வைக்கும் கணவன் மனைவி பாசம்: நெட்டிசன்களை அழ வைத்த வைரல் வீடியோ 

மணமகளின் உற்சாகத்தை பார்த்து மணமகனுக்கும் உற்சாகம் தொற்றிக்கொள்கிறது. அவரும் மணமகளுடன் சேர்ந்து நடனமாடத் தொடங்குகிறார். 

திருமணத்தில் குத்தாட்டம் போட்ட மணமகள் 

வைரலாகி வரும் இந்த வீடியோவில், திருமணம் முடிந்தவுடன், மணப்பெண் தனது கணவன் வீட்டார் முன்னிலையில், மேள தாளத்துக்கு ஏற்ப நடனமாடுவதை காண முடிகின்றது. இந்த நேரத்தில் இன்னும் பல பெண்கள் அவருடன் நடனமாடுகிறார்கள். மணமகள் நடனமாடுவதைப் பார்த்து, மணமகனும் அவருடன் சேர்ந்து நடனமாடத் தொடங்குகிறார். மாப்பிள்ளை வீட்டார் மணமகளின் இந்த நடனத்தை பார்த்து வாயடைத்து நிற்கிறார்கள். 

மணமகளின் வேற லெவல் வீடியோவை இங்கே காணலாம்: 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

(@ipglitz)

மகிழ்ச்சி கொந்தளிப்பில் மணமகன் 

இந்த வீடியோவின் முடிவில் மணமகள் நடனமாடுவதைப் பார்த்து, மணமகன் அவர் மீது பண மழை பொழிவதை காண முடிகின்றது. இந்த திருமண வீடியோ ipglitz என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன. தற்போது இந்த வீடியோவிற்கு நெட்டிசன்கள் பல வித கமெண்டுகளை அள்ளி வீசி வருகிறார்கள். மேலும் மணமகள் யாரைப் பற்றியும் எதைப் பற்றியும் யோசிக்காமல் தன் மனம் போல் நடனமாடும் விதம் இணையவாசிகளை கவர்ந்துள்ளது. 

மேலும் படிக்க | ‘பலவான் வாழ்வான்! பலவீனன் வீழ்வான்’ வைரலாகும் சிங்கத்தின் இரை வேட்டை வீடியோ 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News