நடுரோட்டில் பைக்கில் காதலியுடன் காதலன் செய்த செயல்: வீடியோ வைரல்
ஸ்கூட்டர் கீழே விழுந்ததும், இளைஞர் கீழே இறங்கி அதை தள்ள தொடங்கினார். ஆனால் சாலை முழுவதும் கழிவுநீர் தேங்கி இருந்ததால் அவரது காதலி ஸ்கூட்டரை விட்டு கீழே இறங்கவில்லை.
காதலர்களின் வைரல் வீடியோ: சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகி வருகின்றன. இவற்றைக் கண்டு நெட்டிசன்கள் தங்கள் மன அழுத்தங்களை மறந்து ரசித்து சிரிக்கின்றனர். அந்தவகையில் சமீப காலங்களில் திருமண வீடியோக்கள், காதலர்களின் வீடியோக்கள், விலங்குகளின் வீடியோக்கள் இணையத்தளத்தை கலக்கி வருகின்றன. அந்தவகையில் காதலர்களின் வீடியோக்கள் எப்போதும் மிக விரைவாக வைரல் ஆகின்றன. காதலர்களின் வீடியோக்களுக்கு எப்போதும் ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றது. காதலர்களின் வீடியோக்களை இணையவாசிகள் மிகவும் விரும்பி பார்ப்பதுண்டு. அதன்படி தற்போது வெளிவந்துள்ள காணொளி இவை அனைத்தையும் விட வித்தியாசமானது. இந்த வீடியோ காதலன் மற்றும் காதலியுடன் தொடர்புடையதாகத் தெரிகிறது.
அதன்படி மழைக்கு நடுவே நடந்த நகைச்சுவை காட்சி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த லட்சக்கணக்கான மக்கள் சிரித்து மகிழ்ந்ததாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க | மலைப்பாம்புக்கு ஒரு மரியாதை வேண்டாம்? இப்படியா கொஞ்சறது: ஷாக்கிங் வைரல் வீடியோ
ஆம், மழை காரணமாக சாலையில் தண்ணீர் தேங்கியதால், இளைஞர் ஒருவரின் ஸ்கூட்டி நடுரோட்டில் சிக்கிக்கொண்டது. அந்த இளைஞன் தனது ஸ்கூட்டியின் பின்னால் காதலியுடன் சென்று கொண்டிருந்தான். ஸ்கூட்டி பழுதானவுடன் அந்த இளைஞன் கீழே இறங்கி அதைத் தள்ள ஆரம்பித்தான். மறுபுறம் சாலை முழுவதும் கழிவுநீர் தேங்கி இருந்ததால் பெண் இருக்கையை விட்டு நகரவில்லை.
அந்த பையன் ஸ்கூட்டி மற்றும் பெண் இரண்டையும் வைத்துக்கொண்டு சர்க்கஸ் செய்கிறான். ஆனால், தண்ணீரின் ஓட்டமும், பெண்ணின் எடையும் தெரியாததால், அந்த பையனால் ஸ்கூட்டியை கையாள முடியவில்லை. அதனால் ஸ்கூட்டி தண்ணீரில் விழுந்தது, மேலும் அந்த ஸ்கூட்டிவுடன் அந்த பெண்ணும் விழுகிறார். தண்ணீரில் கால வைக்க வெறுத்த அந்தப் பெண் அழுக்குத் தண்ணீரில் முழுமையாக நனைந்தாள்.இந்த சம்பவத்திற்கு பிறகு அந்த காதலனால் சிரிப்பை அடக்க முடியவில்லை.
இதோ அந்த வீடியோ:
இந்த வீடியோ எங்கிருந்து வந்தது என்பது தெரியவில்லை. இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வீடியோ Memelogy என்ற பக்கத்தில் பதிவேற்றப்பட்டது. இந்த வீடியோவை இதுவரை லட்சக்கணக்கானோர் பார்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.