காதலன் - காதலிக்கு இடையில் சர்பிரைஸ் கிப்டுகள் எல்லாம் சகஜம் என்றாலும், வீடியோவில் வைரலாகியிருக்கும் காதலி கொடுத்த சர்ப்ரைஸால் பையன் மிரண்டு போயிட்டான். அதுவும் லிப் கிஸ் அடிக்கும்போது அந்த சர்பிரைஸை காதலி கொடுக்க, பார்த்த காதலன் திக்குமுக்காடிவிட்டான். அப்படி என்ன? சர்பிரைஸாக இருக்கும் என நீங்கள் நினைக்கலாம். உண்மையாக சொல்ல வேண்டும் என்றால், இது ஒரு போங்கு ஆட்டம். ஆம், காதலி மேல் இருக்கும் ஆசையில், அவளுக்கு முத்தம் கொடுக்கும் ஆர்வத்தில் யார் கையை பிடித்திருக்கிறோம் என்றே அந்த பையனுக்கு தெரியவில்லை. அதில் தான் டிவிஸ்டே இருக்கிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | நாய்குட்டிகளிடம் மாட்டிக்கொண்ட சிறுவன்! பிறகு என்ன ஆனது என்று பாருங்க!


அந்த வீடியோவில் காதலனும், காதலியும் வீட்டிற்குள் நெருக்கமாக சோபா மீது அமர்ந்திருக்கின்றனர். அப்போது, இருவரும் லிப்லாக் கொடுத்து மகிழ்ச்சியையும் அன்பையும் பறிமாறிக் கொள்கின்றனர். உணர்ச்சி மிகுதியில் காதலன், தன் மீது இருக்கும் காதலியின் கையை எடுத்து முத்தம் கொடுத்து வருடுகிறான். காதலியும் இதில் மெய்சிலிர்க்க, திடீரென முத்தத்தை நிறுத்திவிட்டு எழுந்து சென்றுவிடுகிறாள். ஆனால், அவன் பிடித்திருந்த காதலியின் கை மட்டும், அவன் வசமே இருக்க, திகைத்து போய்விடுகிறான்.



அந்த நொடியில், சோபாவின் பின்புறம் அமர்ந்திருந்த அவர்களின் நண்பன் சிரித்தபடியே எழுந்து வருகிறான். காதலனிடம் போங்கு ஆட்டம் ஆட காதலியும், நண்பனும் ஏற்கனவே முடிவு செய்து வைத்துவிட்டார்கள். அந்த போங்கு ஆட்டத்தில் காதலனும் மாட்டிக் கொண்டான். இதில் வேடிக்கை என்னவென்றால், காதலிக்கு லிப்லாக் கொடுக்கும்போதும், அவளுடைய கையை வருடும்போது வித்தியாசத்தை அவன் துளியும் உணரவில்லை. இந்த சம்பவத்துக்குப் பிறகு காதலியும், அங்கிருந்த நண்பனும் குலுங்கி குலுங்கி சிரிக்கின்றனர். அப்போது தான் அந்த காதலனுக்கு நடந்த விஷயமே புரிகிறது. இந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகியிருக்கிறது. 


மேலும் படிக்க | போட்டோ சூட் கேட்குதா? பாகனை தலைகீழாக தூக்கி எறிந்த யானை!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ