போட்டோ சூட் கேட்குதா? பாகனை தலைகீழாக தூக்கி எறிந்த யானை!

திருமண போட்டோ சூட் கிடையே திடீரென மிரண்ட யானை தும்பிக்கையால் பாகானை தலைகீழாக தூக்கும் காட்சி இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.  

Written by - RK Spark | Last Updated : Nov 26, 2022, 01:26 PM IST
போட்டோ சூட் கேட்குதா? பாகனை தலைகீழாக தூக்கி எறிந்த யானை!  title=

தற்போது திருமண போட்டோ சூட் எடுக்கும் முறை வைரல் ஆகி வருகிறது.  பல புதிய புதிய கோணங்களில் போட்டோ எடுக்கும் நடைமுறையும் பெருகி உள்ளது.  மலைக்கு மேல், தண்ணீருக்கு அடியில், படகில் என பல இடங்களில் திருமண போட்டோ சூட் நடைபெறுகிறது.  அந்த வகையில், கேரள மாநிலம் குருவாயூரில் திருமண போட்டோ சூட் கிடையே திடீரென மிரண்ட யானை தும்பிக்கையால் பாகானை தலைகீழாக தூக்கும் காட்சி இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.  

மேலும் படிக்க | 'ப்ப்பா... என்ன ஒரு பொறுப்பு': யானை செய்த செயலால் வாய் பிளந்த நெட்டிசன்ஸ், வைரல் வீடியோ 

கேரளா மாநிலம் குருவாயூர் கோவில் வைத்து நேற்றைய தினம் நிகில், அஞ்சலி என்ற தம்பதியினருக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. பின்பு கோவில் வளாகத்துக்குள் வைத்து போட்டோ சூட் எடுத்துக் கொண்டிருந்துள்ளனர். அப்போது கோவில் சம்பந்தப்பட்ட சடங்குகளுக்காக கோவிலுக்கு சொந்தமான தாமோதர் தாஸ் என்ற யானை கோவிலை நோக்கி அழைத்து வரும்போது திடீரென மிரண்ட யானை தன்னுடன் நடந்து வந்த  பாகான்  நோக்கி திரும்பி தும்பிக்கையால் பாகனை தலைகீழாக தூக்கி உள்ளது. 

 

இதில் கீழே விழுந்த பாகன்  மற்றும் போட்டோ சூட் எடுத்துக் கொண்டிருந்த திருமண தம்பதியினரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். யானையின் மீது இருந்த மற்றொரு பாகானின் துரித நடவடிக்கையால் யானை சிறிது நேரத்தில் அமைதியானது. இந்த காட்சிகள் தற்போது இணையதளங்களில் மிகவும் வைரல் ஆகி வருகின்றன.

மேலும் படிக்க | நோயாளியாக வந்த பேய், அடுத்து என்னாச்சி: வீடியோ வைரல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News