கிராமப்புறங்களில் பெரும்பாலான வீடுகளில் கோழி, ஆடு, மாடு போன்ற பல விலங்குகளை வளர்ப்பார்கள், அவற்றுடன் பேசுவது, விளையாடுவது, குடும்ப உறுப்பினரை போல அரவணைப்பது என மக்கள் செய்வார்கள்.  பொதுவாக ஆடு என்றதும் பெரும்பான்மையான மக்களின் சிந்தனைக்கு வருவது, அதனை உணவாக சமைத்து சாப்பிடுவது தான்.  ஆனால் இங்கு ஒரு சிறுமி அந்த ஆட்டிற்கே பாசமாக உணவு ஊட்டிவிடும் காட்சி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.  இதுபோன்று நெஞ்சங்களை நெகிழ செய்யும் காட்சிகள் பல இணையங்களில் பரவி கிடக்கின்றது, இவை ரசிக்கும்படியானதாகவும், மனித நேயத்தை உணரவைக்கும் விதமாகவும் அமைந்திருக்கின்றது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | கிணற்றுக்குள் விழுந்த பூனையின் திக் திக் நிமிடங்கள்.. வைரலாகும் வீடியோ!


இந்த வீடியோவானது, சமூக வலைத்தளங்களில் ஒன்றான ட்விட்டர் வலைதள பக்கத்தில் பகிரப்பட்டு இருக்கிறது.  யோக் என்கிற ட்விட்டர் கணக்கு பக்கத்தில் பகிரப்பட்டுள்ள அந்த வீடியோவில் வெள்ளை நிறத்தில் செம்மறி ஆடு ஒன்று அறையில் உள்ள நாற்காலியில் சாவகாசமாக அமர்ந்திருக்கின்றது.  அந்த ஆட்டிற்கு நேரெதிரே ஒரு மேஜையின் மீது சில உணவுப்பொருட்களும், அருகில் ஒரு சிறுமியும் நின்றுகொண்டு இருப்பதை இந்த வீடியோவில் காணமுடிகிறது.  பின்னர் அந்த சிறுமி மேஜையின் மீது வைக்கப்பட்டுள்ள உணவை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து ஒரு குழந்தைக்கு ஊட்டிவிடுவது போல அந்த ஆட்டிற்கு ஊட்டிவிடுகிறாள்.  அந்த ஆடும் சொகுசாக அமர்ந்துகொண்டு சிறுமி ஊட்டிவிடும் உணவை ரசித்து சாப்பிட்டுகொண்டு இருக்கின்றது.


 



இந்த வீடியோவை இணையாவசிகள் பலரும் பார்த்து ரசித்து வருகின்றனர், இந்த வீடியோவிற்கு 'சிறப்பு விருந்தினர்' என கேப்ஷனும் சேர்த்து பதிவிடப்பட்டு இருக்கின்றது.  இணையத்தில் பதிவேற்றப்பட்டுள்ள இந்த வீடியோவை பல்லாயிரக்கணக்கான இணையவாசிகள் பார்த்து ரசித்ததோடு, இந்த வீடியோவிற்கு பதினோறாயிரத்திற்கு மேற்பட்ட லைக்குகளும், பல கமெண்டுகளும் பதிவிடப்பட்டு வருகிறது.


மேலும் படிக்க | திருமணத்தில் மணமகன் செய்த வேலை: ஷாக் ஆன மணமகள், வீடியோ வைரல்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ