கோயம்புத்தூர்: பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காக இன்று கோவை செல்லும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ட்விட்டரில் #GoBackStalin என்னும் ஹேஷ்டேக் டிரெண்ட் செய்யப்பட்டு வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் (MK Stalin) பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காக இன்று கோவை (Coimbatore) செல்கிறார். இன்று கோவை வ.உசி பூங்கா மைதானத்தில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொள்ளும் அவர் திருப்பூரில் மாலை நடைபெறும் நிகழ்ச்சியிலும் கலந்து கொள்கிறார். பின்பு திருப்பூர் ஏற்றுமதியாளர்களுடன் கலந்துரையாடுகிறார். நாளை கொடிஸியா வளாகத்தில் நடைபெறும் முதலீட்டாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டபின் சென்னை திரும்புகிறார்.


இந்நிலையில் டுவிட்டர் சமூக வலைதளத்தில் #Gobackstalin எனும்  ஹேஸ்டேக் ட்ரெண்ட் ஆகி வருவது அக்கட்சியினரை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளது. 


முன்பும் முதலமைச்சர் ஸ்டாலின் கோவைக்கு வரும் போது gobackstalin என்ற ஹேஸ்டேக் ட்ரெண்டிங் ஆனது பரவலாக பேசப்பட்ட நிலையில், இன்று மீண்டும் ட்ரெண்ட் ஆகியிருக்கிறது. திமுகவின் ஐடி விங் நிர்வாகிகளும் பதிலுக்கு #KovaiwelcomesStalin எனும் ஹேஸ்டேக் பதிவிட்டு வருவதால் அதுவும் தற்போது ட்ரெண்ட் ஆகி வருகிறது.



ALSO READ |  கோவை ‘கொங்குல இனி எவனுக்கும் பங்கில்ல': திமுக போஸ்டரால் பரபரப்பு


ஏற்கனவே முதல் முறையாக முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு, கோவைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகை தந்த போது, இதேபோன்ற ஹேஷ்டேக் டிரெண்ட் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.


தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி, கோவை முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் இன்று கோவையில் பல்வேறு இடங்களில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. 


அதேநேரத்தில் பொதுப்பணித்துறையில் சென்னை மற்றும் திருச்சி மண்டலங்களை சீரமைத்து கோவையை தலைமையிடமாக கொண்டு புதிய மண்டலம் உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த புதிய மண்டலத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், தர்மபுரி மட்டும் நீலகிரி உள்ளிட்ட 9 மாவட்டங்கள் இடம் பெறுகிறது. மேலும் இந்த பொதுப்பணித்துறை மண்டலத்தில் பணியாற்ற புதிய பணியிடங்களையும் உருவாக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


ALSO READ | TN Budget 2021-22: மதுரை, கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் விரைவில் தொடங்கப்படும்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR