கோவை ‘கொங்குல இனி எவனுக்கும் பங்கில்ல': திமுக போஸ்டரால் பரபரப்பு

அரசியல் கட்சி தலைவர்களை வரவேற்பது, அரசின் திட்டங்களை வரவேற்பது, எதிர்கட்சியினர் சார்பில் ஒட்டப்படும் நன்றி அறிவிப்பு போஸ்டர்கள், நலத்திட்ட உதவி போஸ்டர்கள் ஆகியவை அதிகளவில் ஒட்டப்பட்டு வருகிறது. 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Nov 16, 2021, 05:51 PM IST
கோவை ‘கொங்குல இனி எவனுக்கும் பங்கில்ல': திமுக போஸ்டரால் பரபரப்பு title=

 

2021 சட்டமன்ற தேர்தலில் திமுக வென்று ஆட்சியில் அமர்ந்ததும் கோரானா சிகிச்சைகள் மற்றும் அரசு திட்டங்களில் கொங்கு மண்டலம் புறக்கணிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் அமைச்சர் சக்ரபாணியை நியமித்து கொரானா கால நடவடிக்கைகளை மேற்கொண்டது. முன்னதாக சேலம் முதல் கோவை வரையிலான கொங்கு பகுதி மாவட்டங்களில் 2019 பாராளுமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளையும் வென்றிருந்த போதும் 2021 சட்டமன்ற தேர்தலில் ஒருசில தொகுதிகளை தவிர்த்து அதிக இடங்களை அதிமுகவே கைப்பற்றியது. 

இதைத் தொடர்ந்து கொங்கு மண்டலத்தில் திமுகவை வளர்ச்சி பெற செய்யவும் அங்கு தமிழ்நாடு அரசின் திட்டங்களை கொண்டு சேர்க்கவும் மற்றும் மக்களின் குறைகளை தீர்க்கவும் வரும் நகர உள்ளாச்சி தேர்தலை மனத்திற்கொண்டு மின்சாரம் மற்றும் அயத்தீர்வை அமைச்சரும் கரூர் சட்ட மன்ற உறுப்பினருமான செந்தில் பாலாஜியை நியமித்து முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். 

ALSO READ | கர்நாடக மேகதாதுவில் அணை கட்ட அனுமதிக்க முடியாது: நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன்

கடந்த சில நாட்களாக கோவையில் முகாமிட்டு கோவை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அவர் குறைதீர்ப்பு முகாம்களை நடத்தி பொதுமக்களிடம் மனுக்களையும் பெற்றுவருகிறார். இந்நிலையில் கோவையில் கடந்த சில நாட்களாக அரசியல் கட்சியினர் போஸ்டர் ஒட்டுவது அதிகரித்து வருகிறது. அரசியல் கட்சி தலைவர்களை வரவேற்பது, அரசின் திட்டங்களை வரவேற்பது, எதிர்கட்சியினர் சார்பில் ஒட்டப்படும் நன்றி அறிவிப்பு போஸ்டர்கள், நலத்திட்ட உதவி போஸ்டர்கள் ஆகியவை அதிகளவில் ஒட்டப்பட்டு வருகிறது. 

குறிப்பாக நகரில் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளான இரயில் நிலையம், பேருந்து நிலையம், மேம்பாலங்களில் இந்த போஸ்டர்கள் ஒட்டப்படுவது வாடிக்கையாக இருந்து வருகிறது. கோவை அவினாசி சாலை மேம்பாலம், வடகோவை மேம்பாலம், இரயில் நிலையம் அருகேயுள்ள லங்கா கார்னர் இரயில்வே மேம்பாலம், காந்திபுரம் புதிய மேம்பாலம் பகுதிகளில் மேம்பாலத்தின் தூண்களில் அதிகளவு போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருகின்றது. 

இதனிடையே திமுக (DMK) சார்பில் புதிதாக ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் பேசுபொருளாக மாறியுள்ளது. ‘கொங்குல இனி எவனுக்கும் பங்கில்ல’ என்ற வாசகங்களுடன், முதலமைச்சர் ஸ்டாலின், சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், மின் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, மாவட்ட பொருப்பாளர்கள் ந.கார்த்திக், பையா கவுண்டர் ஆகியோரின் புகைப்படங்கள் அதில் இடம்பெற்றுள்ளது. தமிழ்நாடு அரசு அலுவலகங்கள் உருமாற்ற தடைச்சட்டம் 1959ன் படி அரசு அலுவலகங்கள், மேம்பாலங்கள், அரசுப்பேருந்துகள் ஆகியவற்றில் போஸ்டர்கள் ஒட்டவும், விளம்பரங்கள் செய்யவும் தடை செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் ஆளும் கட்சியினரே அதனை மீறும் வகையில் போஸ்டர்கள் ஒட்டியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ALSO READ: RAIN ALERT! இனி ஹெலிகாப்டரில் வெள்ள மீட்புப் பணி - அமைச்சர் அறிவிப்பு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News