48 மணி நேரத்திற்கான அவசர சிகிச்சை செலவை அரசே ஏற்கும் - மு.க.ஸ்டாலின்!

விபத்துக்குள்ளாகும் நபர்களுக்கு 48 மணி நேரத்தில் உயிரை காக்கும் அசத்தலான திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளார் தமிழக முதல்வர்  

Written by - ZEE Bureau | Last Updated : Nov 19, 2021, 08:06 PM IST
48 மணி நேரத்திற்கான அவசர சிகிச்சை செலவை அரசே ஏற்கும் - மு.க.ஸ்டாலின்!

சென்னை: தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சாலையில் ஏற்படும் விபத்துகளை தடுக்கவும், உயிரிழப்புகளை தடுக்கவும், சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் தமிழக அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.  இந்தக் கூட்டத்தில் சாலைகளில் எதிர்பாராத விதமாக ஏற்படும் விபத்துக்களை தடுப்பது, உயிரிழப்புகளை தடுப்பது, முதலுதவி செய்ய பயிற்சி அளிப்பது, புதுவிதமான தொழில்நுட்பங்களை பயன்படுத்தி சாலையில் ஏற்படும் அசம்பாவிதங்களை தடுப்பது போன்றவை குறித்து விளக்கப்பட்டது.

ALSO READ பாலாற்றின் கரையோரம் உள்ள வீடு வெள்ளத்தால் அடித்து செல்லும் காட்சி!

மேலும் இதில் முக்கியமாக "இன்னுயிர் காப்போம்-உதவி செய்" என்கிற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.  இந்த சிறப்பான திட்டம் மூலமாக சாலையில் விபத்துக்குள்ளாகும் நபர்களுக்கு முதல் 48 மணி நேரத்திற்கான அவசர உயிர்காக்கும் சிகிச்சையை அரசே முழுமையாக ஏற்றுக்கொள்ளும்.  இந்த பிரத்தியேக திட்டத்திற்கு என்றே முதற்கட்டமாக 50 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.  இந்தத் திட்டத்தின் மூலம் முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு அட்டை இல்லாதவர்களும், வேறு மாநிலத்தை சேர்ந்தவர்களும், வேறு நாட்டை சேர்ந்தவர்களும், எவராக இருந்தாலும் இந்த திட்டத்தின் மூலம் பயனடைந்து கொள்ளலாம்.  விரைவில் இந்த திட்டம் முதலமைச்சரின் காப்பீடு திட்டத்துடன் இணைக்கப்பட உள்ளது.

mks

இதற்கென்று தனியார் மருத்துவமனைகள் அரசு மருத்துவமனைகள் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் என 609 மருத்துவமனைகள் ஒதுக்கப்பட்டுள்ளது.  மக்களுக்கு உதவி செய்யவும், அவர்களின் உயிரை காக்கும் ஒரே நோக்கில் செயல்படுத்தப்பட்டது தான் இந்த திட்டம்.  இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக முதல்வருடன் போக்குவரத்து துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, தலைமைச் செயலாளர் முனைவர் இறையன்பு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் மற்றும் இன்னும் பிற உயர் அதிகாரிகள் சிலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ கேம் விளையாட விடாததால் வீட்டில் இருந்து நகை, பணம் எடுத்துச் சென்ற 15 வயது சிறுவன்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News