செக்ஸ் தீவு மீண்டும் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செக்ஸ் தீவு என்பதை, ’சிற்றின்பங்கள் எல்லாம் இன்பமயம்’ என்ற ஒற்றை வார்த்தைக்குள் அடக்கிவிடலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

செக்ஸ் தீவைப் பற்றி கேட்டால், இந்தியர்களுக்கு நம்ப முடியாமல் இருக்கலாம், ஆனால் இது உண்மையான ஒன்று. லாஸ் வேகாஸில் உள்ள ஒரு ரிசார்ட் செக்ஸ் தீவை மீண்டும் திறப்பதாக அறிவித்துள்ளது.


செக்ஸ் தீவைத் திறப்பதாக வெளிப்படையாக விளம்பரம் செய்துள்ளது லாஸ் வேகாஸில் உள்ள ஒரு ரிசார்ட். உலகின் உச்சக்கட்ட பொழுதுபோக்கைத் தருவதாக உறுதியளிக்கிறது இந்த விளம்பரம். அதன்படி, கட்டுப்பாடற்ற உடலுறவு, அளவில்லாத மது மற்றும் போதை மருந்துகள் பயன்படுத்துவது என எல்லாவற்றுக்கும் இங்கே அனுமதி உண்டு. ஆனால், 50 பேருக்கு மட்டுமே டிக்கெட் கொடுக்கப்படும்


கொரோனா பாதிப்பிற்கு பிறகு மீண்டும் திறக்கப்பட்டது
இந்த ரிசார்ட் வெளியிட்டுள்ள விளம்பரங்களில் மே 5 முதல் மே 8 வரை நான்கு நாட்களுக்கு, செக்ஸ் தீவு மீண்டும் திறக்கப்படும் என்று கூறுகிறது. 


இந்த தீவு கொரோனா தொற்றுநோய் காரணமாக மூடப்பட்டிருந்தது. லாஸ் வேகாஸ் உலகின் மிகவும் கொண்டாடமான நகரங்களில் ஒன்றாக கருதப்படுகிறது  இங்கு பல பெரிய ஆடம்பரமான பார்கள் மற்றும் கேசினோக்கள் உள்ளன.


மேலும் படிக்க | அந்தரங்கம் புனிதமானது ஆனால் அது பூஞ்சைத் தொற்றுக்குத் தெரியாது


பிட்காயினில் பணம் செலுத்தும் வசதி
பிட்காயின் மூலமாகவும் பணம் செலுத்தலாம் என்று விளம்பரத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. தீவுக்கு வருபவர்களின் தனியுரிமையும் பாதுகாக்கப்படும். டிக்கெட் வாங்கி, உல்லாசமாக இருந்தவர்கள் யார் என்ற விவரம் தெரிவிக்கப்படாது.


செக்ஸ் தீவுக்கு செல்வதற்கு ஒரு டிக்கெட்டின் விலை $4500, அதாவது சுமார் 3.5 லட்சம் ரூபாய் வசூலிக்கப்படும். விண்ணப்பித்தவர்களில் யாருக்கு டிக்கெட் கொடுக்கப்பட்டதோ, அவர்களை விமான நிலையத்தில் இருந்து ரிசார்ட்டுகளே நேரடியாக தனியார் இடத்திற்கு அழைத்துச் செல்லும் என்று விளம்பரத்தில் கூறப்பட்டுள்ளது.


அங்கு, 3 இரவுகள் மற்றும் 4 பகல்கள் தங்கள் விருப்பம் போல் இருக்கலாம்.  



50 பேருக்கு மட்டுமெ அனுமதி
அங்கு வரும் விருந்தினர்களுக்காக தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கும் பெண்கள், எஸ்.டி.டி மற்றும் எச்.ஐ.வி இல்லாதவர்கள் என்று பரிசோதிக்கப்பட்டவர்கள் என்று ரிசார்ட் தெரிவித்துள்ளது. 


இந்த விளம்பரத்தின் ஹைலைட் என்ன தெரியுமா? உடலுறவின்போது, ஆணுறை பயன்படுத்தவோ அல்லது பாதுகாப்பாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. பெண்களை இடமாற்றம் செய்யலாம்!


குட் கேர்ள் நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சி, வேகாஸ் ரிசார்ட்டில் நடத்தப்படும். ஸ்ட்ரிப் பிளாக்ஜாக், ஹாலோகிராபிக் கச்சேரி மற்றும் குதிரை சவாரி போன்ற செயல்பாடுகளும் இந்த செக்ஸ் தீவில் நடைபெறும்.


இந்த சர்ச்சைக்குரிய நான்கு நாள் செக்ஸ் ஐலேண்ட் பார்ட்டி "வரம்பற்ற உடலுறவு மற்றும் மதுபானம்" என்று உறுதியளித்தாலும் பல்வேறு கேள்விகளை எழுப்புவதோடு, கவலைகளையும் அதிகரிக்கிறது. 


இந்த நிகழ்வு மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தாலும், பலருக்கு இது உற்சாகத்தைக் கொடுத்துள்ளது. "இந்தப் பயணம் நிச்சயமாக என் வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவங்களில் ஒன்றாக மாறும்" என்று ஒருவர் கூறினார்.


இந்த விளம்பரம் "தவிர்க்கப்பட வேண்டிய நிகழ்ச்சி" மற்றும் "அருவருப்பானது" என பலரால் விமர்சிக்கப்பட்டாலும், இந்த நான்கு நாள் நிகழ்வு முழுமையாக சட்டப்பூர்வமானது என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெளிவுபடுத்தியிருக்கின்றனர்.


மேலும் படிக்க | இஞ்சியை தோல் நீக்கி பயன்படுத்தும் பழக்கம் உள்ளதா; இந்த செய்தி உங்களுக்குத் தான் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR