1995இல் வெளியான ஒரு படம் இன்றும் உலக அளவில் பேசப்படுகிறது, வைரலாகிறது என்றால் அது காலம் கடந்த படம் என்று சொல்லலாம். ஆனால், திரைப்படத்திற்காக மட்டுமல்ல, அதிலுள்ள பாடல்களுக்காகவும் திரைப்படங்கள் பிரபலமானவை. அந்த வகையில் கோலிவுட்டில் வெளியாகி சக்கைப்போடு போட்ட திரைப்படங்களில் ஒன்று முத்து. சூப்பர்ஸ்டார் ரஜினியின் மிகவும் பிரபலமான திரைப்படங்களில் முக்கியமான ஒன்று ‘முத்து’.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியாவில் வெளியாகி மூன்று ஆண்டுகள் கழித்து 1998ல் ஜாப்பனில் "முத்து தி டான்சிங் மகாராஜா' என்ற பெயரில் வெளியான முத்து திரைப்படம், ஐப்பானில் சுமார் 450 மில்லியன் வரை வசூல் செய்தது சாதனை படைத்தது.


மேலும் படிக்க | ஐஸ்வர்யா ராயின் மகள் ஆராத்யாவா இது? வைரலாகும் புகைப்படங்கள்..


முத்து படத்தின் சாதனையை முறியடிக்க எந்தப் படமும் இல்லை என்ற அளவுக்கு ஜப்பானில் பாக்ஸ் ஆபிஸ் கிங்காக வலம் வந்து கொண்டிருந்த திரைப்படத்தின் 24 ஆண்டு கால சாதனையை, ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் வெளியான ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் தான் முறியடித்தது.


இப்படி பல சாதனைகளை படைத்த நடிகர் ரஜினிகாந்த் நடித்த முத்து திரைப்படத்தை, ஜப்பானில் 2018 ஆம் ஆண்டில் ரீ ரிலீஸ் செய்தும் சாதனை படைத்த ஜப்பானியர்களின் மனதில் முத்துவுக்கு நிரந்தர இடம் உண்டு.


அதை நிரூபிக்கும் வகையில், அண்மையில் புதுச்சேரி பல்கலைகழத்தில் நடந்த விழாவில் மாணவர்கள் மத்தியில் "ஜப்பான்" நாட்டை சேர்ந்த "கிபுகீ" என்பவர் கலந்துகொண்டபோது, மேடையில் ரஜினிகாந்தின் பாடலை தமிழில் பாடி கலக்கிவிட்டார்.



இந்த வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகிறது. இந்த வீடியோவை பலரும் டிவிட்டரில் பகிர்ந்துள்ளனர்.


ஜப்பானின் மிட்சுபிஷி நிறுவனத்தில் 77 வயதான குபோகி ஜி, தமிழ் மாணவர்கள் மத்தியில் தமிழ் பாடலை பாடி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் நடத்திய GLOBIZZ'24 நிகழ்வில், Mitosubishi Corporation Ltd, ஜப்பானின் Kuboki San என்பவர், எம்பிஏ மாணவர்களிடையே பேச வந்தபோது முத்துவின் ’ஒருவன் ஒருவன் முதலாளி’ பாடலை பாடிய வீடியோவில் அவரது மகிழ்ச்சி தெரிகிறது.


மேலும் படிக்க | Selvaraghavan : செல்வத்தில் புரளும் செல்வராகவன்! எத்தனை கோடி சொத்துகளுக்கு அதிபதி தெரியுமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ