Director Selvaraghavan Net Worth, Salary Per Movie Full Details : தமிழ் சினிமாவில் திறமை மிகு இயக்குநர்களுள் ஒருவராக வலம் வருபவர், செல்வராகவன். இவரது தந்தை கஸ்தூரி ராஜா ஒரு இயக்குநர் என்பதாலோ என்னவோ செல்வராகவனுக்கும் திரைப்பட இயக்கத்தின் மீது காதல் வந்தது. அப்படி வந்த காதல்தான், தற்போது அவரை ஒரு சிலருக்கு ஃபேவரட் இயக்குநராக கோலிவுட் ரசிகர்கள் மத்தியில் அமர்த்தி வைத்துள்ளது.
செல்வராகவனுக்கு பிறந்தநாள்..
தமிழ் திரைப்பட இயக்குநர் செல்வராகவன், 2002ஆம் ஆண்டு வெளியான ‘துள்ளுவதே இளமை’ படத்திற்கு திரைக்கதை எழுதி திரையுலகிற்குள் பிரவேசித்தார். அதன் பிறகு, தனது தம்பி தனுஷை வைத்து 2003ஆம் ஆண்டில் ‘காதல் கொண்டேன்’ படத்தை இயக்கினார். இப்படம் சூப்பர்-டூப்பர் ஹிட் அடிக்க “யார்டா இந்த புது இயக்கநர்..?” என அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார். இதையடுத்து இவர் 2004ஆம் ஆண்டு இயக்கிய ‘7 ஜி ரெயின்போ காலனி’ படமும் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது. தொடர்ந்து புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன் உள்பட பல படங்களை இயக்கினார். இதில் ஒரு சில படங்கள் வெளியான போது வெற்றிபெறவில்லை என்றாலும் 10 ஆண்டுகளுக்கு பிறகு ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. செல்வராகவன், இன்று (மார்ச் 5) தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவருக்கு தற்போது 47 வயதாகிறது.
விவாகரத்து..இரண்டாவது திருமணம்..குழந்தைகள்..
செல்வராகவன், சோனியா அகர்வாலுடன் 3 படங்களில் சேர்ந்து பணிபுரிந்தார். இவர்களுக்குள் காதல் பற்றிக்கொள்ள, 2006 ஆம் ஆண்டு அந்த காதல் திருமணத்தில் முடிந்தது. இதையடுத்து, இருவரும் 2009ஆம் ஆண்டு விவாகரத்து செய்து கொண்டனர். செல்வராகவன் இதையடுத்த 2011ஆம் ஆண்டு தனது ‘மயக்கம் என்ன’ படத்தில் உதவி இயக்குநராக இருந்த கீதாஞ்சலியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு லீலாவதி, ஓம்கார் என இரு குழந்தைகள் உள்ளனர்.
செல்வங்களில் புரளும் செல்வராகவன்..
பெரும்பாலான திரையுலக செலிப்ரிடிக்கள் போலவே செல்வராகவனும் பணம் படைத்தவராக இருப்பதாக கூறப்படுகிறது. இவர்,சென்னையில் தனியாக சொகுசு வீடு வைத்திருப்பதாகவும் இவரது சொத்து மதிப்பு சுமார் ரூ.30ல் இருந்து 40 கோடி வரை இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
நடிகராகவும் வலம் வரும் இயக்குநர்..
செல்வராகவன் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் வலம் வந்தாலும் படங்களில் நடிக்காமல் இருந்தார். அவரை நடிக்க வைத்த இயக்குநர், நெல்சன் திலீப்குமார்தான். பீஸ்ட் படத்தில் செல்வராகவனை அல்தாஃப் ஹுசைன் என்ற கதாப்பாத்திரத்தில் கெளரவ தாேற்றத்தில் வந்திருந்தார். இதையடுத்து அவர் இயக்கிய ‘நானே வருவேன்’ படத்திலும் ஒரு கொலை கார கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படி, படங்களில் நடித்தும் சம்பாதித்து வருகிறார் செல்வராகவன். அவருக்கு ஒரு படத்திற்கு 2 முதல் 4 காேடி வரை சம்பளமாக கொடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.
அடுத்து வரவிருக்கும் படங்கள்..
செல்வராகவன், 2022ஆம் ஆண்டு கடைசியாக நானே வருவேன் படத்தை இயக்கிய பிறகு நடிப்பில் இறங்கி விட்டார். தெலுங்கில் ரவி தேஜா நடித்து வரும் ஒரு கமர்ஷியல் படத்தில் இவர் முக்கிய கதாப்பாத்திரமாக நடிக்க இருக்கிறார். இதையடுத்து, தனது சகோதரர் இயக்கி நடிக்கும் ‘ராயன்’ படத்திலும் இவர் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். இவரது கதாப்பாத்திரத்தின் போஸ்டரை ‘ராயன்’ படக்குழு சமீபத்தில் வெளியிட்டிருந்தது. இதில் தனுஷையும் செல்வராகவனையும் மீண்டும் ஒன்றாக பார்ப்பதற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டுள்ளனர்.
மேலும் படிக்க | கமலின் ‘தக் லைஃப்’ படத்தில் இருந்து விலகிய துல்கர் சல்மான்? காரணம் என்ன?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ