சமூக ஊடகங்களில் வைரலாகும் வீடியோக்கள் பிடித்திருந்தால், அதை பார்த்து ரசித்தவர்கள் பகிர்ந்து, அதை மற்றவர் பார்த்து மகிழ்ந்து என அப்படியே சங்கிலித் தொடராய் பகிரப்பட்டு வைரலாகின்றன.  சமூக ஊடகத்தில் பகிரப்படும் வீடியோக்கள் சில சமயம் சிரிக்க வைத்தால், சில சமயம் இப்படி எப்படிப்பா என கேள்வியை எழுப்புகின்றன. சில சமயம் ஆச்சரியப்பட வைக்கும் பல வீடியோக்கள் பல சமயங்களில் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, நேரில் பார்க்க முடியாத காட்சிகளை பார்ப்பதில் மக்களுக்கு எப்போதுமே ஆர்வம் அதிகம் என்பதால், அதுபோன்ற வீடியோக்களும் பலரால் பார்க்கப்பட்டு இணையத்தில் வைரல் ஆகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

விலங்குகள் வீடியோக்கள் அனைவருக்கும் பிடித்தமானவைகளாக இருப்பதில் ஆச்சரியம் இல்லை. நெகிழ்ச்சியை ஏற்படுத்தும் நாய்க்குட்டி முதல் புலிக்குட்டி என பல வீடியோக்கள் பலரால் ரசிக்கப்பட்டு பகிரப்பட்டு வைரல் ஆகின்றன.


அதேபோல, குழந்தைகளின் வீடியோக்களும் வைரலாகின்றன. அவை குறும்பு வீடியோவாக இருந்தாலும் சரி, இல்லை அன்பை வெளிகாட்டுவதாக இருந்தாலும் அனைவரையும் கவர்கின்றன.


மேலும்  படிக்க |   கடவுள் இருக்கான் குமாரு... முட்டையை அபேஸ் செய்த பாம்பிற்கு ஏற்பட்ட கதி!


அண்மையில் சமூக ஊடகங்களில் ஒரு குழந்தையின் வீடியோ, அந்தக் குழந்தையின் அன்பை வெளிக்காட்ட போதுமானதாக இருக்கிறது. அழகாய் அமர்ந்து, மெதுவாய் தனது கையில் வைத்திருக்கும் கிண்ணத்தில் இருந்து உணவை எடுத்தும் குழந்தையின் பொறுமையை பாராட்டத் தோன்றுகிறது.


குழந்தையின் பொறுமையைப் பாராட்டினால், அமைதியாக அமர்ந்து உணவுக்காக காத்திருக்கும் பறவைகளின் அன்பை என்ன சொல்வது? வீடியோவை பார்த்து மகிழுங்கள்...



இந்த வீடியோவில், குழந்தையின் பொறுமை மட்டுமல்ல, பறவைகளின் பொறுமையும் அன்பும் நெகிழச் செய்கிறது. அன்பை எப்படியெல்லாம் வெளிப்படுத்தலாம் என்று போட்டி வைத்தால், அதில் இந்த குழந்தையின் அன்பும் கண்டிப்பாக இடம் பெறும்.


குழந்தைகளின் மென்மையான உணர்ச்சிகளும், பொறுமையான செயலும் பார்ப்பவர்களை பரவசமடையச் செய்கிறது. அதனால் தான் இந்த வீடியோ வைரல் ஆகிறது.


மேலும்  படிக்க |  கலிகாலம் தான்... நூடுல்ஸ் போல் பாம்பை உயிருடன் கபளீகரம் செய்யும் தவளை... திகிலூட்டும் வீடியோ!


(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் உறுதி செய்யவோ, பரிந்துரைக்கவோ இல்லை.)


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ