அழகில் மனதை கொள்ளை கொள்ளும் மயில்கள், நமக்கு பரவசத்தை அளிக்க கூடியவை. மயிலின் நடனத்தை பார்த்தால் மயங்காதவர்கள் இருக்க முடியாது. மயில் தனது தோகையை விரித்து ஆடும் போது, அந்த காட்சியை ரசிக்க ஆயிரம் கண்கள் இருந்தாலும் போதாது. உலகில் உள்ள அழகான பறவைகளில் மயில் ஒன்று.  இதன் தோகையில் இருக்கும் 'கண்' போன்ற வடிவங்கள், தோகையை விரிக்கும் போது மிகவும் அழகாகத் தோற்றமளிக்கும். மயில்கள் அடர்ந்த காடுகளில் அல்லாமல், குறைந்த மரங்கள் கொண்ட நிலப்பரப்பில் அதிகம் வாழ்கின்றன


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பார்ப்பதற்கு பெண் மயிலை விட ஆண் மயில் தான் மிகவும் அழகானவை. ஆண்மையில் தோகை விரித்து ஆடி பெண் மயிலுக்கு சிக்னல் கொடுக்கும். அதைப் பார்த்து மயங்கும் பெண்மையில், அதனுடன் இனச்சேர்க்கை இல் ஈடுபடும். பார்க்க மிகவும் அழகாக இருக்கும் முயல்கள், குரலை எழுப்பினால் நம் ஆள் கேட்க முடியாது. அந்த அளவிற்கு குரல் மோசமாக இருக்கும். மோசமாக பாடுபவர்கள் கேலி செய்ய, மயில் நாதம் என்று அழைக்கும் வழக்கம் உண்டு. அந்த வகையில் சாந்தமான பறவையான மயில், ஆடும் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது (Viral Video) . மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும் இந்த வீடியோ, உங்கள் மனதை கொள்ளை கொள்ளும் என்பது உறுதி.


மயில் நடனமாடும் அற்புத வீடியோவை கீழே காணலாம்



 


மயில்கள் பாதுகாக்கப்பட்ட பறவைகள் என்பதால், அவற்றை வீட்டில் செல்லப் பிராணிகளாக வளர்க்க முடியாது. மயில், அதன் வண்ணம், விசிறி போன்ற தோகைகள் கொண்ட அதன் வடிவமைப்பு, இணையைக் கவர ஆடும் அற்புத நடனம் என பார்ப்பவர்களை எப்போதும் வியக்க வைக்கின்றன. பெண் மயிலை கவர்வதைத் தவிர மழை வரும் போதும், தனது சந்தோஷத்தை வெளிப்படுத்தும் வகையில் மயில்கள் தோகை விரித்து நடனமாடும்.


சில நாட்களுக்கு முன் மற்றொரு மயில் வீடியோ ஒன்று வைரலாகியது. பறவைகள் விலங்குகள் வாழ்க்கையிலும் மனித வாழ்க்கையை போலவே காதலுக்கு பஞ்சமில்லை என்பதை விவரிக்கும் வகையில் மயில்களின் காதல் வீடியோ மிகவும் வைரலாகியது. வீடியோவில்  காணபடும் மயில், தனது காதலியை ஈர்க்க,  அற்புதமாக நடனம் ஆடி கவர முயற்சிக்கிறது. ஆனால், அந்த பெண் மயிலின் மனம் இரங்கவேயில்லை. அது காதல் கொள்ளும் மன நிலையில் இல்லை போலும். எனவே அது ஆண் மயிலை உதாசீனம் செய்யும் வகையில் விலகிச் செல்கிறது. 


மேலும் படிக்க | காதலியை கவர நடனமாடும் ஆண் மயில்...  அலட்சியம் செய்யும் பெண் மயில்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ