சே... என்ன கொடுமை சார்... காதலியை கவர நடனமாடும் ஆண் மயில்... அலட்சியம் செய்யும் பெண் மயில்

பறவைகள் விலங்குகள் வாழ்க்கையிலும் மனித வாழ்க்கையை போலவே காதலுக்கு பஞ்சமில்லை. அந்த வகையில்  மயில்களின் காதலை விவரிக்கும் வீடியோ மிகவும் வைரலாகி வருகிறது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Sep 11, 2024, 05:54 PM IST
  • உலகின் மிக அழகான பறவைகளில் ஒன்று மயில்.
  • ஆண் மயிலின் நடனத்திற்கு மயங்காத பெண் மயில்.
  • இணையத்தில் வைரலாகும் மயிலின் காதல் வீடியோ.
சே... என்ன கொடுமை சார்... காதலியை கவர நடனமாடும் ஆண் மயில்...  அலட்சியம் செய்யும் பெண் மயில் title=

உலகில் உள்ள அழகான பறவைகளில் மயில் ஒன்று.  இந்தியாவின் தேசிய பறவையாக இருக்கும் மயில்கள் தோகை விரித்து ஆடும் போது ரசிக்காதவர்கள் இருக்க முடியுமா என்ன. மயில்களில் ஆண் மயில் தனது அழகான தோகைக்காக பெயர் பெற்றது. பொதுவாக, ஆண் மயில் பெண் மயிலைக் கவர தோகையை விரித்து ஆடும். இதன் தோகையில் இருக்கும் 'கண்' போன்ற வடிவங்கள், தோகையை விரிக்கும் போது மிகவும் அழகாகத் தோற்றமளிக்கும். 

பறவைகள் விலங்குகள் வாழ்க்கையிலும் மனித வாழ்க்கையை போலவே காதலுக்கு பஞ்சமில்லை. அந்த வகையில்  மயில்களின் காதலை விவரிக்கும் வீடியோ மிகவும் வைரலாகி வருகிறது. வீடியோவில் (Viral Video) காணபடும் மயில், தனது காதலியை ஈர்க்க, நடனம் ஆடி கவர முயற்சிக்கிறது. ஆனால், அந்த பெண் மயிலின் மனம் கல்லாகி போய் விட்டதோ என்னவோ...  அது மனம் இரங்கவேயில்லை. அது காதல் கொள்ளும் மன நிலையில் இல்லை. எனவே அது ஆன் மயிலை உதாசீனம் செய்யும் வகையில் விலகிச் செல்கிறது. இந்த வைரல் வீடியோ (Viral Video), Nature is Amazing என்ற கணக்கில், X தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. பதிவிட்ட இரண்டு நாட்களிலேயே  லட்சக்கணக்கான பார்வைகளை தாண்டிவிட்டது. ஆயிரக்கணக்கானோர் தங்களது கருத்துக்களையும் பதிவிட்டு வருகின்றனர்.

இணையத்தில் வைரலாகும் மயிலின் காதல் வீடியோவை கீழே காணலாம்:

 

மேலும் படிக்க | Viral Video: குறுக்கே நின்ற பைக்... சிறுமிக்கு வந்த திடீர் திருட்டு ஐடியா - உறைந்துபோன உரிமையாளர்!

மயில்கள் திறந்த காடுகளில் அல்லது பயிரிடப்பட்ட வயல்வெளிகளில் வாழ்கிறது, அங்கு இவை பழங்கள், தானியங்கள் போன்றவற்றை உண்கின்றன. மயில் வால் இறகுகள் 6 அடி நீளம் வரை இருக்கும். மயில்கள் பாதுகாக்கப்பட்ட பறவைகள் என்பதால், அவற்றை வீட்டில் செல்லப் பிராணிகளாக வளர்க்க முடியாது. மயில், அதன் வண்ணம், விசிறி போன்ற வால், நீண்ட வடிவான இறகுகள், இணையைக் கவர அவைகள் ஆடும் அற்புத நடனம் என பார்ப்பவர்களை எப்போதும் ஆச்சர்ர்யப்பட வைக்கின்றன. பெண் மயிலை கவர்வதைத் தவிர மழை வரும் போதும், தனது சந்தோஷத்தை வெளிப்படுத்தும் வகையில் மயில்கள் தோகை விரித்து நடனமாடும். ஆண் மயிலினை பீக்காக் (peacock) என்றும், பெண் மயிலினை பீஹென் (peahen) என்றும் அழைக்கிறோம்.

மேலும் படிக்க | சூரிய கடவுளை பாதிப்பதாக கூறி சோலார் பேனல்கள் அடித்து உடைப்பு - வைரல் வீடியோ உண்மையா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News