வைரல் வீடியோ: இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. 


சமூக ஊடகங்களில்  பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. சமீப காலங்களில் திருமணங்களின் வீடியோக்கள் பட்டையை கிளப்பி வருகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தை கலக்கி வருகின்றது.


திருமணம் தொடர்பான வீடியோக்கள் எப்போது வெளிவந்தாலும், சலசலப்பை உருவாக்குகின்றன. சில சமயங்களில் திருமண ஊர்வலங்களின் வேடிக்கையான வீடியோக்களும், சில சமயம் மணப்பெண் மணமகனின் வேடிக்கையான வீடியோக்களும் வைரலாகின்றன. இன்றைய திருமணங்களில், மணமகன் மற்றும் மணமகளின் பாணி மிகவும் வித்தியாசமாகவும் தனித்துவமாகவும் உள்ளது. 


தற்போது மீண்டும் ஒரு வீடியோ வெளியாகியுள்ளது. அதில் மணமகன் தனது நண்பர்களுடன் சேர்ந்து திருமண மேடையில் மணமகளை கவர ஒரு அழகான நடனத்தை செய்து காட்டுகிறார். புஷ்பா படத்தின் ஸ்ரீவள்ளி பாடலுக்கு மணமகனும் அவரது நண்பர்களும் நடனம் ஆடத் தொடங்குகிறார்கள். இதை பார்த்து அனைவரும் கவரப்படுகிறார்கள். 


மாப்பிள்ளைக்கு புஷ்பா காய்ச்சல்


சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோ-வில் மாலை மாற்றிய பிறகு மணமகனின் நண்பர்கள் அனைவரும் மேடையில் ஏறுவதை காண முடிகின்றது. பிறகு அனைவரும் சேர்ந்து புஷ்பா படத்தின் ஸ்ரீவள்ளி பாடலுக்கு நடனம் ஆட ஆரம்பித்தனர். மணமகன் மற்றும் அவரது நண்பர்களின் இந்த பாணியைப் பார்த்து மணமகள் மிகவும் மகிழ்ச்சியடைகிறார். 


மேலும் படிக்க | எனக்கு கல்யாணம் வேண்டாம்: அடம் பிடித்து ஷாக் கொடுத்த மணமகள், வைரல் வீடியோ


மணமகள் எத்தனை மகிழ்ச்சியாக இருக்கிறார் என்பதை அவரது முகத்திலிருந்தே காண முடிகின்றது. தனக்காக மணபெண் தனது நண்பர்களுடன் சேர்ந்து ஆடும் நடனம் அவரை உணர்ச்சிவசப்படுத்தி மகிழ வைக்கிறது. 


புஷ்பா படம் வெளியாகி பல மாதங்கள் ஆனாலும், அப்படத்தின் தாக்கமும் குதூகலமும் இன்னும் மக்களிடம் உள்ளது என்பதற்கு இந்த வீடியோ ஒரு உதாரணம். 


ஸ்ரீவள்ளி பாடலுக்கு நடனமாடி அசத்திய மாப்பிள்ளையின் வீடியோவை இங்கே காணலாம்: