போனை முதுகில் வைத்துக் கொண்டு தேடும் நபர் - வைரல் வீடியோ

செல்போனை முதுகில் வைத்துக் கொண்டு தேடும் நபரின் வீடியோ காண்போரை சிரிக்க வைக்கிறது.

Written by - S.Karthikeyan | Last Updated : Apr 27, 2022, 06:41 PM IST
போனை முதுகில் வைத்துக் கொண்டு தேடும் நபர் - வைரல் வீடியோ title=

ஞாபக மறதி என்பது பலருக்கும் இருக்கும் பொதுவான பிரச்சனை. எல்லோரும் ஏதாவதொரு சூழலில், திடீர் ஞாபக மறதியால் அவதிப்பட்டிருப்போம். அவசரமாக வெளியில் கிளம்பும்போது, வீட்டிற்கு வரும்போது இப்படியான சூழ்நிலைகளில் பிரச்சனைகளை எதிர்கொண்டிருப்போம். அதாவது கையில் அப்போது தான் சாவி அல்லது ரிமோட்டை வைத்திருந்திருப்போம். ஏதாவதொரு யோசனையில் அதனை ஓரிடத்தில் வைத்துவிட்டு மற்ற வேலைகளில் கவனம் செலுத்துவோம்.

மேலும் படிக்க | ஜுகல்பந்தியாகும் தலேர் மெஹந்தியின் பஞ்சாபி குத்துப் பாட்டு: வெளிநாட்டவரின் வைரல் டான்ஸ்

பின்னர், அந்த பொருள் மீது ஞாபகம் வரும்போது வீட்டையே அலசுவோம். தேடும் பொருள் எங்கும் இருக்காது. இங்கேயே தானே இருந்தோம், எங்கு வைத்திருப்போம் என மண்டையை சுவற்றில் அடித்துக் கொள்ளாத குறையாக யோசிப்போம் எந்த தீர்வும் கிடைக்காது. அந்த நேரத்தில் வீட்டில் யாராவது வந்து, என்ன தேடிக்கொண்டிருக்கிறீர்கள் என கேட்பார்கள். நாமும் தேடிக் கொண்டிருக்கும் பொருளை கூறுவோம். அப்போது, உங்களை பாக்கெட்டிலேயே வைத்திருக்கிறீர்கள் அல்லது கையிலேயே வைத்துக் கொண்டு ஏன் இப்படி சுற்றிக் கொண்டிருக்கிறீர்கள் என கேள்வி எழுப்புவார்கள்.

அப்போது தான் நமக்கு ஞாபகம் வரும், அந்தப் பொருளை கையிலேயே வைத்துக் கொண்டிருக்கிறோம் என. சாவியை தேடிக்கொண்டிருக்கும்போது சுவற்றில் தலையை அடித்துக் கொள்ளலாம் என நினைத்திருப்போம். ஆனால், இப்போது கொஞ்சமும் யோசிக்காமல் தலையை சுவற்றில் அடித்துக் கொள்வோம். இது உடனடி ஞாபக மறதி என்று கூட செல்லலாம். இந்தப் பிரச்சனை பொதுவாக பலரும் எதிர்கொண்டிருக்க நேரிடும். அப்படியான வீடியோ தான் இன்று இணையத்தில் வைரலாகியுள்ளது. ஒருவர் கடற்கரையோரம் இருக்கும் நாற்காலியில் ஜாலியாக படுத்திருந்திருக்கிறார். அப்போது அவருடைய முதுகில் செல்போன் ஒட்டிக் கொண்டுள்ளது. அதனை அவர் கவனிக்காமல் போனை வெகு நேரம் தேடிக் கொண்டிருக்கிறார். 

மேலும் படிக்க | பெண்ணை தாக்கும் காட்டு யானை: பதபதைக்க வைக்கும் வீடியோ

சிறிது நேரத்துக்குப் பிறகே அவர் அவதானித்தார், போன் தன்னுடைய முதுகில் இருந்தது என்று. இதனை வீடியோவாக ஒருவர் பதிவு செய்து இணையத்தில் பதிவேற்றியிருக்கிறார். காமெடியான இந்த வீடியோ நெட்டிசன்களையும் வெகுவாக கவர்ந்துள்ளது.  

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News