நேரலை செய்தி ஒளிபரப்பில் அரைநிர்வாண ஆடையுடன் இடம்பெற்ற இளம் பெண்...?
அல்போன்சோ மெர்லோஸ் ஸ்பெயினில் ஒரு பிரபலமான பத்திரிகையாளர். சமீபத்தில் அவர் ஒளிபரப்பிய ஒரு நேர்காணலின் வீடியோவில் அரை நிர்வாணமாக ஒரு பெண் இடப்பெற்றது தற்போது பேச்சு பொருளாய் மாறியுள்ளது.
கொரோனா முழு அடைப்பு காரணமாக தற்போது பெரும்பான்மை மக்கள் வீட்டில் இருந்து வேலை பார்க்க வேண்டிய சூழலில் உள்ளனர். மென்பொருள் பொறியாளர்களுக்கு இந்த சூழல் ஏதுவாக அமைந்தாலும், ஊடகம் மற்றும் காணொலி துறை சார்ந்த ஊழியர்களுக்கு வீட்டில் இருந்து வேலை பார்ப்பது சற்று சிரமமாக தான் உள்ளது.
ஊடக துறையை சார்ந்த நண்பர்கள் வீட்டில் இருந்து வேலை பார்க்கும் போது, குறிப்பாக நிருபர்கள் வீட்டில் இருந்து நேரலை ஒளிபரப்பில் ஈடுபடும் போது அவர்களின் பெற்றோர், கூட்டாளர்கள், குழந்தைகள் மற்றும் செல்லப்பிராணிகளும் இந்த வீடியோக்களில் எதிர்பாரா விதமாக வந்த செல்வதை நாம் பார்க்கிறோம். இந்த வீடியோக்கள் சிலருக்கு வேடிக்கையாக அமைந்தாலும், அனைவருக்கும் அவ்வாறே அமைந்துவிடுவதில்லை.
இதேப்போன்ற நிகழ்வு தான் தற்போது பிரபல ஸ்பானிஷ் பத்திரிகையாளருக்கும் நிகழ்ந்துள்ளது. ஆனால் அவரது வீடியோவில் இடம்பெற்ற அந்த சில நொடிகள் அவருக்கு மிகவும் சங்கடமாக அமைந்துள்ளது என்பதை நாம் ஒப்புக்கொண்டு தான் ஆக வேண்டும்.
அல்போன்சோ மெர்லோஸ் ஸ்பெயினில் ஒரு பிரபலமான பத்திரிகையாளர். சமீபத்தில் அவர் ஒளிபரப்பிய ஒரு நேர்காணலின் வீடியோவில் அரை நிர்வாணமாக ஒரு பெண் இடப்பெற்றது தற்போது பேச்சு பொருளாய் மாறியுள்ளது.
வீடியோ நேர்காணலில், அவர் பேசிக் கொண்டிருந்தபோது, ஒரு அரை நிர்வாணப் பெண் சாதாரணமாக பின்னணியில் நடந்து செல்கிறார். இந்த விஷயத்தில் வேடிக்கை என்னவென்றால், வீடியோவில் நடந்து சென்ற பெண் அவரது மனைவியோ அல்லது காதலியோ அல்ல. ஸ்பானிஷ் தொலைக்காட்சி நிகழ்ச்சியான ‘சோஷியல்’ பத்திரிகையின் நிருபர் அலெக்ஸியா ரிவாஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளது. மேலும் இந்த விவகாரம் தற்போது மெர்லோஸின் திருமண வாழ்வில் ஒரு பிரலையத்தை ஏற்படுத்தியுள்ளது.