தத்தித் தத்தி நடை பழகும் ஹர்திக் பாண்ட்யா-வின் புதிய வீடியோ..!
இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டரான ஹர்திக் பாண்ட்யா காயத்தில் இருந்து மீண்டு வரும் வீடியோவை வெளியிட்டு உள்ளார்!!
இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டரான ஹர்திக் பாண்ட்யா காயத்தில் இருந்து மீண்டு வரும் வீடியோவை வெளியிட்டு உள்ளார்!!
இந்திய கிரிக்கெட் வீரரான ஹர்திக் பாண்ட்யாவுக்கு தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான T20 தொடரின் போது முதுகில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து தற்காலிகமாக போட்டிகளில் இருந்து விலகி இருந்த ஹர்திக் பாண்டியாவுக்கு கடந்த வெள்ளிக்கிழமை அறுவை சிகிக்சை நடந்தது.
அறுவை சிகிக்சை நடந்து இருக்கும் தகவலை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருக்கும் ஹர்திக் பாண்ட்யா, விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றி கூறியுள்ளார். ஹர்திக் பாண்ட்யா குறைந்தபட்சம் 3 முதல் 4 மாதங்கள் வரை கிரிக்கெட் விளையாட முடியாது என்று தெரிகிறது. எனினும், ஹர்திக் காயத்தில் இருந்து மீண்டு பழைய நிலைக்கு வரும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளார். இதுபற்றி வீடியோ பதிவு ஒன்றை அவர் டுவிட்டரில் வெளியிட்டு உள்ளார்.
அதில், சிறு குழந்தையின் நடைகள்... ஆனால் முழு உடற்தகுதிக்கான எனது பயணம் இங்கிருந்தே தொடங்குகிறது. எனக்கு ஆதரவாக இருந்த மற்றும் நான் நலம் பெற விரும்பிய ஒவ்வொருவருக்கும் எனது நன்றிகள் என தெரிவித்து உள்ளார். ஏற்கனவே இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா முதுகுவலி பிரச்சினை காரணமாக தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி தொடரில் இருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணியில் ஹர்திக் தேர்வு செய்யப்படவில்லை. வருகிற நவம்பர் 3 ஆம் தேதி இந்தியாவில் தொடங்கவுள்ள வங்காளதேச அணிக்கு எதிரான சர்வதேச 20 ஓவர் போட்டியிலும் அவர் விளையாடவில்லை.