தாயின் அன்புக்கு எல்லையே இல்லை. இது ஒரு தாயும் அவளுடைய குழந்தையும் மட்டுமே பகிர்ந்து கொள்ளும் ஒரு சிறப்பான பந்தம். இது ஒரு தூய உணர்ச்சி. ஒரு தாயின் அசைக்க முடியாத அன்பு என்பதை வரையறுக்க முடியாதது. இதை மீண்டும் நிரூபிக்கிறது ஒரு தாய் கங்காரு மற்றும் அதன் குட்டியின் வீடியோ. தாய்மை என்பது மனிதற்களுக்கு மட்டும் சொந்தமானது அல்ல என்பதையும்  நிரூபிக்கும் இந்த வீடியோவை இந்திய நிர்வாக அதிகாரி சுப்ரியா சாஹு ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். வீடியோவில், குழந்தை மற்றும் தாய் இருவரும் பரஸ்பரம் வாஞ்சையுடன் கட்டிப்பிடிப்பதைக் காணலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வீடியோவில், கங்காரு குட்டி ஒன்றும், அதன் தாயும் கட்டிப்பிடிப்பதைக் காணலாம். அந்த தாய் குட்டியை எவ்வலவு நேசிக்கிறது என்பதையும் வீடியோவில் தெளிவாக உணரலாம். தாய் கங்காரு தன் குட்டிக்கு நிறைய முத்தங்கள் கொடுப்பதைக் காணலாம். தாயின் அன்பு வீடியோவில் தெளிவாக காணப்பட்டது.


மேலும் படிக்க | 'மண்ணுல விளையாடாதனா கேட்டயா’: ஷாம்பூ போட்டு பாம்பை குளிப்பாட்டும் நபர், வைரல் வீடியோ


வைரலாகும் வீடியோவை இங்கே காணலாம்:




இந்த வீடியோ சுமார் 1.2 லட்சம் பார்வைகளையும், மூவாயிரம் லைக்குகளையும் பெற்றுள்ளது. "அன்பு விலைமதிப்பற்றது" என்ற தலைப்பில் வீடியோ பகிரப்பட்டுள்ளது.


பொதுவாக கங்காருக்கள் வினோதமான விலங்கு இனங்களாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் இவை வயிற்றில் பையுடன் அதன் குட்டியை சுமந்து செல்கிறது.  கங்காரு பாலூட்டிகளில் வயிற்றில் பை உள்ள இனத்தைச் சேர்ந்த ஒரு விலங்கு. இவை பொதுவாக ஆஸ்திரேலியா மற்றும் அதன் அருகில் உள்ள தீவுகளில் காணப்படுகின்றன. இவை நான்கு கால்களைக் கொண்டிருப்பினும் தன் பின்னங்கால்களால் தத்திச்செல்கின்றன. இதனுடைய வால்  இவை நிற்பதற்கு சமநிலையை கொடுக்கிறது. கங்காருக்கள் முழுமையாக வளர்ச்சியடையாத குட்டிகளை பெறுகின்றன. கங்காரு குட்டிகள் பிறக்கும் பொழுது மிகவும் லேசான எடையுடன் பிறக்கின்றன.


மேலும் படிக்க | கொஞ்சம் விட்டிருந்தா சோலி முடிஞ்சிருக்கும், மலைபாம்புக்கு பல்பு: வீடியோ வைரல்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ