கொஞ்ச விட்டிருந்தா சோலி முடிஞ்சிருக்கும், மலைபாம்புக்கு பல்பு: வீடியோ வைரல்

Scary Python Video: பார்த்துக்கொண்டிருக்கும் போதே, மலைப்பாம்பின் மீது பெண் ஒருவர் விழுகிறார். அதன்பின் நடந்ததை வீடியோவில் பாரத்தால் உங்களை கிடுகிடுக்க வைக்கும்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Dec 28, 2022, 10:48 AM IST
  • மலைப்பாம்பு மற்றும் பெண்ணின் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
  • மலைப்பாம்பு பெண்ணை எப்படி தாக்க முயற்சிக்கிறது.
  • சத்தம் இல்லாமல் பெரிய யுத்தம் நடந்து முடிகிறது.
கொஞ்ச விட்டிருந்தா சோலி முடிஞ்சிருக்கும், மலைபாம்புக்கு பல்பு: வீடியோ வைரல் title=

மலைப்பாம்பு மற்றும் பெண்ணின் வைரல் வீடியோ: இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம். இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன.

சமூக வலைத்தளன்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. சமீப காலங்களில் பாம்புகளின் வீடியோக்கள் பட்டையை கிளப்பி வருகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இப்போது மலைப்பாம்பு மற்றும் பெண்ணின் வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகின்றது.

 மேலும் படிக்க | யாருடா இங்க காட்டுக்கு ராஜா - மாஸ் காட்டிய யானைகள்... தெறித்து ஓடும் சிங்கங்கள்!

இந்த நிலையில் தற்போது வைரலாகி வரும் வீடியோவில் பெண் ஒருவர் தரைகளை சுத்தம் செய்துக்கொண்டு இருப்பதை நாம் காணலாம். மறுபுறம் அவர் பின்னர் 10 ஆடி நீளமுள்ள மலைபாம்பு ஒன்று இருப்பதையும் நாம் காணலாம். அந்த பெண் பாம்பு பின்னர் இருப்பதை கவனிக்காமல் தனது வேலையை செய்துக்கொண்டே இருக்கிறார், அப்போது திடீரென அந்த பாம்பின் மீது அவர் விழுகிறார், உஷாரான அந்த மலைப்பாம்பு சில நொடிகளில் அந்த பெண்ணை தாக்க முயற்சித்தது, ஆனால் அந்த பெண் பக்கம் அதிர்ஷ்டம் அதிகமாக இருந்ததால் அங்கிருந்து தப்பி ஓடினாள்.

திக் திக் வீடியோவை இங்கே காணுங்கள்:

மலைப்பாம்பு மற்றும் பெண்ணின் இந்த வீடியோ மிகவும் ஆச்சரியமாகவும் அச்சத்தை அதிகரிக்கும் வகையிலும் உள்ளது. இதைப் பார்ப்பவர்களுக்கும் பீதி பற்றிக்கொள்கிறது. இந்த வீடியோ Tranding Asia என்ற என்ற டிவிட்டர் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு கிடைத்துள்ள வியூஸ்களை பார்த்து இது எவ்வளவு பிரபலம் அடைந்துள்ளது என்பது தெரிகிறது. இந்த வீடியோ இதுவரை 15 லட்சத்துக்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டுள்ளது. இந்த டிரெண்ட் இன்னும் தொடர்கிறது. இந்த வீடியோவுக்கு நெட்டிசன்களும் பல வித கமெண்டுகளை அள்ளி வீசி வருகிறார்கள். 

மேலும் படிக்க | செண்டை மேளம் வாசித்தப்படி மாஸ் எண்ட்ரி கொடுத்த மணமகள்! இணையத்தை கலக்கும் வீடியோ!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News