வைரல் வீடியோ: இன்றைய உலகில், சமூக ஊடகங்கள் நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து உள்ளன. இணையம் ஒரு தனி உலகமாக இயங்கி வருகிறது. இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தாய்க்கும் குழந்தைக்கும் இடையே உள்ள பந்தம் ஒப்பற்றது. இது மனிதர்கள், மிருகங்கள் என்ற வரம்புகளுக்குள் அடங்காதது. இது உலகின் ஆச்சரியமான, நம்பமுடியாத, மிகவும் உன்னதமான, சிறப்பம்சம் வாய்ந்த ஆழமான இணைப்பாக உள்ளது. மனிதர்களானாலும் சரி அல்லது விலங்குகளானாலும் சரி, இந்த உறவை பெரும்பாலும் வார்த்தைகளால் விவரிக்க முடியாது. விலங்குகளின் தாய்ப்பாசத்தை எடுத்துக்காட்டும் பல வீடியோக்களை சமூக ஊடகங்களில் நாம் பார்த்துள்ளோம். 


நாம் மிகவும் நேசிக்கும் ஒருவரை இழப்பதை விட கொடுமையான ஒரு விஷயம் இந்த உலகில் இருக்க முடியாது. ஆனால், சிறு குழந்தைக்கு தாயின் இழப்பு நாம் கற்பனை கூட செய்து பார்க்க முடியாத அளவு சோகத்தை ஏற்படுத்துகின்றது. 


சமீபத்தில் இப்படி ஒரு நிலையை வெளிப்படுத்தும் வீடியோ ஒன்று இணையத்தில் பகிரப்பட்டுள்ளது. குட்டி குரங்கு தனது இறந்த தாயின் உயிரற்ற உடலைப் பற்றிக்கொண்டு அழுவதை சித்தரிக்கும் இந்த வீடியோ இதயத்தை உலுக்கும் வகையில் உள்ளது. நம் கண்களில் கண்ணீரை வரவழைக்கும் இந்த வீடியோ பல இணையவாசிகளை மிகவும் பாதித்துள்ளது. இறந்த தன் தாயுடன் எப்படியாவது பேச வேண்டும், அதை எழுப்ப வேண்டும் என குட்டி குரங்கு படும் பாட்டை வீடியோவில் காண முடிகின்றது. 


மனதை பிழியும் குரங்கின் துயரம்


வீடியோவில் ஒரு தாய் குரங்கு இறந்து கிடப்பதையும், அதன் குட்டி அதை எழுப்ப முயல்வதையும் காண முடிகின்றது. குட்டி குரங்கு தன் தாயின் அருகில் சென்று அதை பிடித்து இழுக்கிறது. ஒரு நபர் குட்டி குரங்கை பற்றி இருக்கிறார். அவர் அதை அங்கிருந்து அழைத்துச்செல்ல மிகவும் முயற்சிக்கிறார். ஆனால், அது விடாமல் தனது தாயின் உடலை மீண்டும் மீண்டும் பற்றி இழுக்கிறது. பின்னர் இறந்த குரங்கு அடக்கத்திற்காக ஒரு குழிக்குள் வைக்கப்படுகின்றது. ஆனால் அதன் குட்டி ஓடி வந்து அதை கட்டிக்கொண்டு அதன் அருகில் படுத்துக்கொள்கிறது. இதை காணும்போது கண் கலங்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. 


அதன் பிறகும் தன் தாய்க்காக குட்டி குரங்கு அழுவதை காண முடிகின்றது. இத்தகைய நிகழ்வுகள் அன்பு மற்றும் இழப்பின் உலகளாவிய இயல்பு மற்றும் உயிரினங்கள் அனுபவிக்கும் உணர்ச்சிகள் மற்றும் அவற்றின் விளைவுகளை காட்டும் வண்ணம் உள்ளன. இந்த வீடியோவில், குட்டி குரங்கின் இழப்பும் பாசமும் அதன் மீது மிகுதியான இரக்கத்தையும் பச்சாதாபத்தையும் ஏற்படுத்துகின்றது. 


மேலும் படிக்க | அரிதான வெள்ளை நிறப் பாம்புக்கு முத்தமிட்ட நபர்: பதற வைக்கும் வைரல் வீடியோ


பார்த்த உடன் அழ வைக்கும் அந்த வீடியோவை இங்கே காணலாம்:



இந்த வீடியோ மூலம் விலங்குகளின் ஆழமான உணர்ச்சிகரமான வாழ்க்கையை பற்றியும், அனைத்து உயிரினங்களிடமும் உள்ள பச்சாதாபம் மற்றும் புரிதலின் முக்கியத்துவத்தைப் பற்றியும் நன்றாக புரிந்துகொள்ள முடிகின்றது. இது வாழ்க்கையின் நிச்சயமற்ற நிலை, இழப்பினால் குழந்தைகள் மற்றும் இளைஞர்களிடையே ஏற்படும் ஆழமான தாக்கம் ஆகியவற்றை நினைவூட்டுகிறது.


இந்த வீடியோ சமூக ஊடக தளமான இன்ஸ்டாகிராமில் Vikram Verma என்ற பயனரால் பகிரப்பட்டுள்ளது. இதற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் 600,000 க்கும் மேற்பட்ட லைக்குகளும் கிடைத்துள்ளன. வீடியோவின் உணர்ச்சிகரமான தாக்கம் சமூக ஊடக பயனர்களிடம் ஆழமாக எதிரொலித்தது. குரங்கின் சோகத்தை பார்த்த இணையவாசிகள் தங்கள் மனவேதனையையும் ஆழ்ந்த அனுதாபத்தையும் வெளிப்படுத்தினர்.


ஒரு பயனர், "இன்று நான் பார்த்த சிறந்த வீடியோ இது. அதுபோன்ற அன்புக்கு அனைவரும் தகுதியானவர்கள்" என்று குறிப்பிட்டுள்ளார். மற்றொரு பயனர், "தாய் அன்பு என்றால் என்ன என்று யாராவது என்னிடம் கேட்டால், இந்த அழகான கிளிப்பைக் காண்பிப்பேன்" என்று குறிப்பிட்டு தாய்வழி அன்பைப் பற்றி வெளிப்படுத்தினார்.


மேலும் படிக்க | கண்ணாடியில் தன்னை பார்த்த குரங்கின் அலப்பறை.. அடக்க முடியாம சிரிப்பீங்க: வைரல் வீடியோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ