அரிதான வெள்ளை நிறப் பாம்புக்கு முத்தமிட்ட நபர்: பதற வைக்கும் வைரல் வீடியோ

Cobra Attack on Man: வைரலாகி வரும் வீடியோவில், நபர் ஒருவர் அரிதான வெள்ளை நிறத்தில் இருக்கும் ராஜ நாகத்திற்கு முத்தமிடும் காட்சி வெளியாகியுள்ளது, இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jun 8, 2023, 02:42 PM IST
  • அரிதான வெள்ளை நிறப் பாம்பு.
  • இன்றைய வைரல் வீடியோ.
  • நபரின் துன்னிச்சலான செயலை கண்டு நீங்கள் அதிர்ந்துபோய்விடுவீர்கள்.
அரிதான வெள்ளை நிறப் பாம்புக்கு முத்தமிட்ட நபர்: பதற வைக்கும் வைரல் வீடியோ title=

இன்றைய வைரல் வீடியோ: இன்றைய பரபரப்பான உலகில், சமூக ஊடகங்கள் நம் பின்னிப்பிணைந்து வாழ்ந்து வருகிறோம். ஏனெனில் இணையதளம் ஒரு தனி உலகமாக இயங்கி வருகிறது. போதைக்கு அடிமையாகி இருப்பது போல் தற்போது மக்கள் இணையத்திற்கு அடைமையாகி உள்ளனர். ஏனெனில் இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். அத்துடன் இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளையும், தகவல்களையும் வழங்குகின்றன. இதில் முக்கிய விஷயம் என்னவென்றால் இங்கு பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான சில விஷயங்களும் இடம்பெற்றுள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் வன விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அதிலும் பாம்புகள் வீடியோவுக்கு எப்போதுமே மவுசு அதிகம். 

பொதுவாக பாம்புகள் இணையத்தின் ஹீரோக்கள் என்றே கூறலாம். ஏனெனில் பாம்பு வீடியோக்கள் மீது இணையவாசிகளுக்கு எப்போதுமே ஒரு கிரேஸ் இருந்து வருகின்றது. மனிதர்களை அதிக அளவில் கவர்ந்த உயிரினங்களில் பாம்புகளுக்கு மிகமுக்கிய இடம் உள்ளது. அவை உலகின் மிக அஞ்சப்படும் உயிரினங்களில் ஒரு உயிரினமாக கருதப்பட்டாலும், அதன் மீது இருக்கும் சுவாரஸ்யம் குறைவதில்லை. மேலும் சில மரபுகளில், அவை தெய்வங்களாகவும் வணங்கப்படுகின்றன. இவற்றை பற்றிய பல கதைகள் மற்றும் நாட்டுப்புறக் கதைகளும் உள்ளன. இவற்றைப் பற்றி அறிய நாம் இன்னும் ஆர்வமாக இருப்பது இயற்கையானது. அதன்படி பாம்புகளின் பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றன. அந்தவகையில் சமீபத்திலும் ஒரு பாம்பு வீடியோ பகிரப்பட்டு வைரல் ஆகி வருகின்றது.

மேலும் படிக்க | பெரிய அப்பாடக்கரா இருந்தா மட்டும் இந்த வைரல் வீடியோவ பாருங்க

அரிய வகை வெள்ளை பாம்பு
அல்பினோ சோப்ரா என்று கூறப்படும் இந்த அரிய வகை வெள்ளை பாம்புகளின் கண்கள் பொதுவாக சிவப்பு அல்லது இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். இந்த பாம்புகள் சூரிய ஒளியில் பல மணி நேரம் இருக்க முடியும். அதேபோல் அல்பினோ கோப்ரா என்ற வகையை சேர்ந்த இந்த நாகப்பாம்பு மரபணு பிரச்சினை காரணமாக வெள்ளை நிறத்தில் இருப்பதாகவும், இது போன்ற மரபணு மற்றும் நிறமிகளில் இருக்கும் பாம்புகள் பிரச்சனைகளால்  வெள்ளைநிறத்தில் இருக்கும்.

வெள்ளை நிற பாம்புக்கு முத்தமிடும் நபர்
இந்த நிலையில் இங்கு வைரலாகும் வீடியோவில், நபர் ஒருவர் முதலில் வெள்ளை நிற நாகப்பாம்பை ஒரு பாக்ஸ்ஸில் இருந்து வெளியே எடுப்பதை வீடியோவில் காணலாம். அதில் நாகப்பாம்பு மிகவும் சுறுசுறுப்பாக இருக்கிறது, ஆனால் பயமின்றி, இந்த நபர் அவரை முத்தமிடுகிறார். இதற்குப் பிறகு பாம்பு அங்கும் இங்கும் ஓடுகிறது, ஆனால் அந்த நபர் மிகவும் புத்திசாலித்தனமாக அதன் கழுத்தைப் பிடித்து, அதன் கண்ணில் இருந்து எதையோ அகற்றுகிறார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதுடன், இதற்கு பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

பாம்புக்கு முத்தமிடும் வீடியோவை இங்கே காணுங்கள்:

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

 

 இந்த வீடியோ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் World_of_snakes_ இல் பகிரப்பட்டுள்ளது. அதே சமயம் இதுவரை 26 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அந்த வீடியோவை பார்த்துள்ளனர். அதுமட்டுமின்றி பலர் இந்த வீடியோவுக்கு தங்களது கருத்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் படிக்க | பாட்டியின் பக்கா டான்ஸ், மாஸ் ரியாக்‌ஷன்.... வைரல் வீடியோ

(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News