இந்தியாவின் இமயமலையில் அரிதான விலங்குகள் ஏராளமான உள்ளன. இமயமலை பனிச்சிறுத்தை என்பது உலக முழுவதும் பிரபலமான ஒன்று. இந்த சிறுதையை காண்பது என்பது அரிதினும் அரிதான ஒன்று. பல ஆண்டு கணக்காக இந்த சிறுத்தையை பலர் தேடிக் கொண்டிருக்கின்றனர். ஒரே ஒருமுறையாவது பார்த்துவிட வேண்டும் என்பது அவர்களின் ஆசை.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | உடலை வில்லாக வளைத்து பம்பரமாக சுழலும் பெண் – வைரல் வீடியோ


ஆனால், பனிச்சிறுத்தையை அவ்வளவு எளிதில் பார்த்துவிட முடியாது. இரவில் மட்டுமே உலாவுவதை வழக்கமாக கொண்டிருப்பதால், பனிப்பிரதேசங்களில் இரவு நேரத்தில் சென்று அதனைக் காண்பது என்பது சவாலான காரியம். பகல் பொழுதில் வாய்ப்புகள் என்பதே கிடையாது. கேமரா வைத்தாவது பார்த்துவிடலாம் என முயற்சி எடுத்தவர்களுக்கு கூட, வாய்ப்புகள் கிட்டவில்லை. படிப்பதற்கு உங்களுக்கு சாதரணமாகத் தெரியலாம். ஆனால், பனிச்சிறுத்தைப் பற்றிய அறிந்தவர்களுக்கே தெரியும் அதனுடைய அபூர்வ ரகசியம்.



இந்த விலங்கு மட்டுமல்ல, இன்னும் சில பல அரிதான விலங்குகள் இமயமலையில் உள்ளன. அவற்றில் ஒன்று ’ஹிமாலயன் ஐபெக்ஸ்’ பனிப்பிரதேச ஆடு. வாள்போன்ற நீண்ட கூரிய கொம்புகளைக் கொண்ட ஆட்டை பார்ப்பதும் அவ்வளவு எளிதான விஷயமல்ல. மனிதர்களின் கண்களுக்கு அந்த விலங்குகள் தென்படுவது என்பதெல்லாம் அபூர்வம். அத்தகைய ஹிமாலயன் ஐபெக்ஸ் ஆடு ஒன்று, இமயமலை பனிப்பிரதேசத்தில் உலாவும் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. இதனைப் பார்த்த நெட்டிசன்கள், இது ஆடா? என வியந்துள்ளனர். பலர் இப்படியான ஆட்டை இப்போது தான் முதன்முறையாக பார்க்கிறோம் என்று வியந்து கூறியுள்ளனர்.


மேலும் படிக்க | கருஞ்சிறுத்தையும் சிறுத்தையும் மோதிக் கொண்டால் எப்படி இருக்கும்..!!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR