சீனா: சமூக ஊடக நேரலையில் மனைவிக்கு தீவைத்து கணவன் கொன்ற கொடூரம்
சமூக ஊடகத்தில் நேரலையில் இருந்த முன்னாள் மனைவிக்கு கணவன் தீவைத்த கொடூர சம்பவத்தில், பாதிக்கப்பட்ட பெண் இறந்த்தால், சீனாவில் சீற்றம் வெடித்துள்ளது.
சமூக ஊடகத்தில் நேரலையில் இருந்த முன்னாள் மனைவிக்கு கணவன் தீவைத்த கொடூர சம்பவத்தில், பாதிக்கப்பட்ட பெண் இறந்த்தால், சீனாவில் சீற்றம் வெடித்துள்ளது.
குடும்ப வன்முறை காரணமாக விவாகரத்து செய்த மனைவி Lamuவை பழிவாங்க நினைத்த கணவன் இந்த கொடூரத்தை அரங்கேற்றியதாக சீன ஊடகங்கள் தெரிவித்துள்ளன
நேரலையில் மனைவி நிகழ்ச்சியை பதிவு செய்துக் கொண்டிருக்கும்போது அங்கு வந்த கணவர், அவர் மீது பெட்ரோல் ஊற்றி, தீ வைத்தார். 30 வயதான அந்த சமூக ஊடக பிரபலம் உடலில் 90 சதவீதம் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். சிகிச்சை பலனளிக்கமல் இரண்டு வாரங்களில் அவர் இறந்துவிட்டார்.
செப்டம்பர் 14 ஆம் தேதி Lamu என்ற பெண்ணின் கணவர் Tang, கையில் ஆயுதங்கள் மற்றும் பெட்ரோலுடன் மனைவியின் வீட்டிற்குள் அடாவடியாக நுழைந்ததாக டெய்லி மெயில் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
அந்த கொடுமையான தாக்குதல் தொடங்கியவுடனே, தீயில் இருந்து கிளம்பிய புகையால், கரும்புகை சூழ்ந்துவிட்டதாக உள்ளூர் ஊடக அறிக்கைகள் தெரிவித்தன.
குடும்ப வன்முறை காரணமாக விவாகரத்துச் செய்த முன்னாள் மனைவி லாமுவை, டாங் பழிவாங்க முயன்றதாக சீன ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த ஆண்டு தொடக்கத்தில், குடும்ப வன்முறை செய்த கணவரை லாமு விவாகரத்து செய்தார். தம்பதிகளின் இரண்டு குழந்தைகளில் லாமுவிடம் ஒரு குழந்தையும், டாங்கிடம் ஒரு குழந்தையும் ஒப்படைக்கப்பட்டனர். தன்னை மீண்டும் திருமணம் செய்து கொள்ளாவிட்டால், ஒரு குழந்தையை கொன்று விடப்போவதாக டாங் மிரட்டினார் என்று கூறப்படுகிறது.
தற்போது டாங்கை போலீசார் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
லாமு ஒரு பிரபலமான திபெத்திய வீடியோ பதிவர் ஆவார். கிராமப்புற சீனாவில் வாழ்க்கையை ஆவணப்படுத்தினார் லாமு. பிரபலமான பாடல்களுக்கு வாயசைத்து பிரபலமானார் லாமு. Tik Tok சீன பதிப்பான Douyin-இல் 7,82,000 பேர் லாமுவை பின்தொடர்ந்தார்கள் என்பதும், அவருக்கு 6.3 மில்லியன் ‘likes’ இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
கர்மவீரரை பற்றிய செய்தி இது | கல்விக்கண் திறந்த காமராஜர் கண் அயர்ந்த நாள்
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR