Viral Video: பாம்பெல்லாம் எனக்கு பஞ்சு மிட்டாய் மாதிரி... நாகபாம்புடன் கொஞ்சி விளையாடும் நபர்!
பாம்பு என்றால் படையே நடுங்கும் என்பார்கள். ஆனால், பாம்புகளின் வீடியோக்கள் தான் எப்போதும் அதிக அளவில் வைரல் ஆகின்றன. பாம்புகளின் வீடியோக்களுக்கு ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றது எனலாம்.
பாம்பு வைரல் வீடியோ: சமூக ஊடகங்களில் நாம் எண்ணிலடங்காத வீடியோக்களை தினமும் காண்கிறோம். இதில் காட்டு வாழ்க்கை மற்றும் விலங்குகள் தொடர்பான வீடியோக்கள் மிகவும் விரும்பி பார்க்கப்படுகின்றன. அதுவும் பாம்புகளின் வீடியோக்கள் என்றால் கேட்கவே வேண்டாம். பாம்பு என்றால் படையே நடுங்கும் என்பார்கள். ஆனால், பாம்புகளின் வீடியோக்கள் தான் எப்போதும் அதிக அளவில் வைரல் ஆகின்றன. பாம்புகளின் வீடியோக்களுக்கு ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றது எனலாம். அதிலும், மலைப்பாம்பு, நாஜ நாகம் போன்ற ஆபத்தான பாம்புகள் என்றால் கேட்கவே வேண்டாம்.
பாம்புகளின் வீடியோக்களை இணையவாசிகள் மிகவும் விரும்பி பார்க்கும் நிலையில், தற்போது ஒன்றல்ல இரண்டல்ல... சுமார் நான்கைந்து பாம்புகளுடன் வித்தியாசமான முறையில் முத்தமிட்டு விளையாடும் வீடியோ ஒன்று மிகவும் வைரலாகி வருகிறது. ஒரு நபர் 4 -5 நாகப்பாம்புடன் வித்தியாசமான முறையில் முத்தமிட்டு விளையாடுவதை வீடியோவில் காணலாம். அவரும் சிறீதளவு கூட அச்சம் இல்லாமல், நெடு நாள் பழகிய நபரைப் போல், விளையாடுவது உண்மையில் அதிர்ச்சியையும் ஆச்சர்யத்தையும் தருகிறது.
வைரலாகும் வீடியோவை கீழே காணலாம்:
பாம்பை நினைத்தாலே மனதில் அனைவருக்கு ஒரு பீதி உணர்வு பரவும் நிலையில், பாம்புகளை மிக அருகில் பார்க்க இந்த சமூக வலைத்தள சமூக ஊடக வீடியோக்கள் உதவுகின்றன. பாம்புகள் தொடர்பான பல வித வித்தியாசமான நிகழ்வுகளை நாம் இவற்றில் காண்கிறோம். பாம்பின் அளவு சிறியதாக இருந்தாலும் சரி, பெரியதாக இருந்தாலும் சரி, அவை மனிதனின் மனதில் கண்டிப்பாக அச்சத்தை ஏற்படுத்துகின்றன. அந்த நபர் எப்படி பயமின்றி நாகப்பாம்பின் தலையை பிடித்தப்படி ஆடுகிறார் என்பதை நீங்கள் காணலாம். மேலும் வைரலாகி வரும் இந்த வீடியோவுக்கு இணையவாசிகள் பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். சிலர் இந்த விளையாட்டு மிக ஆபத்தாக முடியலாம் என எச்சரிக்கின்றனர். தினமும் சமூக ஊடகங்களில் பல வினோதமான மற்றும் விசித்திரமான வீடியோக்கள் பகிரப்படுகின்றன. மக்கள் சமூக ஊடகங்களில் அதிக நேரத்தை வீடியோக்களைப் பார்ப்பதில் செலவிடுகிறார்கள்.
(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)
மேலும் படிக்க | இறந்த தாயை எழுப்பும் குட்டி குரங்கு: இணையத்தை அழவைத்த இழப்பு.... வைரல் வீடியோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ