சவப்பெட்டியில் இருந்து முழித்து பார்தத பெண்!! பயமுறுத்தும் வைரல் வீடியோ..
Horrifying Viral Video : சவப்பெட்டியில் இருக்கும் பெண் கேமராவை பார்த்து முறைக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Horrifying Viral Video : சில நாட்களாகவே இணையத்தில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. இதில், சவப்பெட்டிக்குள் இருக்கும் அந்த பெண், கேமராவை பார்த்து முட்டை கண்களை அகல காண்பித்து முறைக்கிறார். பார்க்கவே பயமாக இருக்கும் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
ரசிகர்களை கவர்ந்த வீடியோ:
தற்போது வைரலாகி வரும் அந்த வீடியோவில் அந்த பெண் சவப்பெட்டிக்குள் அப்படியே படுத்தார்போல இருக்கிறார். அவர் பார்ப்பதற்கும் இறந்தது போலத்தான் தெரிகிறது. ஆனால், யாரும் எதிர்பாராத வகையில் அந்த பெண் கண்களை அகல திறந்து பார்க்கிறார். இதை பார்த்த பலர் அந்த பெண் உண்மையாக உயிருடன் வந்து விட்டதாக நினைத்தனர்.
ஒரு சிலர் இணையத்தில் வைரலாக வேண்டும் என்பதற்காக வேண்டுமென்றே இது போன்ற வீடியோக்களை பொய்யாக ஸ்கிரிப்ட் செய்து வெளியிடுவர். இதுவும், அந்த கும்பல்களின் வேலையாகத்தான் இருக்கும் என கூறப்படுகிறது.
ஒரு சிலர், அந்த பெண்ணின் கண்களின் அசைவு உண்மையாக இருந்ததாக கருதுகின்றனர். இன்னும் சிலர் உடற்கூறாய்வு செய்த பிறகு தசைகள் ரிலாக்ஸ் ஆவதால், இறந்து பல மணி நேரம் ஆன பிறகும் கூட இப்படி நிகழலாம் என சிலர் கருதுகின்றனர்.
உண்மை என்ன?
இந்த வீடியோவுக்கு பின்னால் என்ன நடந்தது என்பது குறித்த இன்னொரு வீடியோவும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், அந்த பெண் சவப்பெட்டிக்குள் படுத்திருப்பது போல நடிப்பதும், பின்பு எழுந்து செல்வதும் தெளிவாக பதிவாகியிருக்கிறது. இதை பார்த்த பலர், கமெண்ட் ஆகி கமெண்ட் செக்ஷனில் வீடியோ பதிவிட்ட நபர்களை காலி செய்து வருகின்றனர்.
ஒரு சிலர், இப்படித்தான் நிறைய டிராமக்கள் இணையத்தில் வைரலாகி வருவதாக கூற, இன்னும் சிலர் “ஏன் இப்படி மக்களை ஏமாற்றி பிழைக்கிறீர்கள்” என்று கேட்டு வருகின்றனர்.
இன்னும் சிலருக்கு, இப்போது இணையத்தில் வைரலாகும் விஷயங்களில் எதை நம்ப வேண்டும் எதை நம்பக்கூடாது என்றே தெரியவில்லை என்றும் கூறி வருகின்றனர்.
மேலும் படிக்க | பேப்பரை வைத்து புடவை கட்டிய பெண்! வைரலாகும் வீடியோ..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ