Viral Video Of 8 People Riding In The Same Bike : தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோவில், ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் பயணம் செய்யும் வீடியோ, இணையத்தில் வைரலாகி வருகிறது.
)
Viral Video Of 8 People Riding In The Same Bike : தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோவில், ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் பயணம் செய்யும் வீடியோ, இணையத்தில் வைரலாகி வருகிறது. இதில், ஒரே பைக்கில் இத்தனை பயணிப்பது, நெட்டிசன்களை அதிர்ச்சியுற செய்திருக்கிறது.
இந்த நிகழ்வு, மிர்சாப்பூர் ஷாஜஹான்பூரில் நடந்திருக்கிறது. இது குறித்து வைரலாகும் வீடியொவில், ஒரே பைக்கில் 8 பேர் பயணம் செய்கின்றனர். கணவன்-மனைவி, அவர்களுடைய 6 குழந்தைகள்தான் அவர்கள். பைக்கை கணவன் ஓட்ட, அவருக்கு பின்னால் மனைவி அமர்ந்திருக்கிறார். அவர்களது குழந்தைகளும் ஒருவர் பின் ஒருவர் அமர, பைக்கிற்கு முன்னால் மூன்று குழந்தைகள் அமர்ந்திருக்கின்றனர்.
வைரல் வீடியொ:
8 பேர் ஒரே பைக்கில் பயணம் செய்தது மட்டும் பெரிய விஷயமில்லை, இதே பைக்கில் இவர்கள் வேறு சில வீட்டு பொருட்களையும் எடுத்து செல்கின்றனர். அந்த பொருட்களில் சில மூட்டையாக கட்டப்பட்டிருக்கின்றன. ஒரு சிலவற்றை அந்த பெண் கைகளில் வைத்திருக்கிறார்.
#Shahjahanpur फुल ज्वाइंट फैमिली को बाइक में लादकर ले जा रहे व्यक्ति को पुलिस ने पकड़ा, पल्सर बाइक को ठेला बनाकर मेला देखने जा रहे थे, थाना मिर्जापुर इलाके में पुलिस ने पकड़ कर गिनती तो बैठे थे आठ लोग, वीडियो वायरल!#amazing #Pulsar #bike #family #Festival #teenagers #viralvideo pic.twitter.com/PDTlAOEJ9D
— Maneesh Mishra | मनीष मिश्रा (@Maneesh24x7Live) November 15, 2024
மெத்தை, பாய், பக்கெட் உள்ளிட்டவை அந்த பைக்கில் எடுத்துச்செல்லப்படுகின்றன. இதை பார்த்த டிராஃபிக் போலீஸார் அவர்களை நிறுத்தினர். பின்னர், அந்த பைக்கில் அமர்ந்திருந்தவர்களை கவுண்ட் செய்கின்றனர். இதையடுத்து, அவர்களுக்கு சாலை விதிமுறைகளை சொல்லிக்கொடுத்த பிறகு அனுப்பி வைத்தனர். மேலும், இது போன்று மீண்டும் செய்யக்கூடாது என்று வார்னிங் கொடுத்திருக்கின்றனர்.
இதை பார்த்த நெட்டிசன்கள், அவரது குடும்பம் குறித்து கவலை தெரிவித்தாலும், சிரிப்பூட்டும் வகையில் கமெண்ட் செய்து வருகின்றனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ