Amazing Mud bath of Elephants video goes viral: அக்கினி வெயில் சுட்டெரிக்கும் நேரத்தில் தண்ணீர் தட்டுப்பாடும் அதிகரித்துள்ளது. நாட்டில் இருப்பவர்கள் செயற்கையாக குளிரூட்டும் உபாயங்களை பயன்படுத்தலாம். மக்கள் தங்களைத் தற்காத்துக் கொள்ள அனைத்து வகையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆனால், காட்டில் இருக்கும் விலங்குகள், கோடையின் கடுமையான வெப்பத்தை தாங்குமா? அவையும் நம்மைப் போலவே, தங்கள் சொந்த வழியில் வெப்பத்தை வெல்ல முயற்சிக்கின்றன. 


கொளுத்தும் கோடையில் தங்களைக் குளிர்ச்சியாக வைத்துக் கொள்வதற்காக யானைகள் கூட்டம் சேற்றில் இறங்கி அதகளம் செய்யும் வீடியோ வைரலாகி வருகிறது.  


வைரலாகும் வீடியோவில் ஒரு சிறிய குளம் அருகே யானைகள் கூட்டம் கூட்டமாக காணப்படுகின்றன. பெரிய யானை, குட்டி யானை என அனைத்து யானைகளும் சேற்றில் நனைந்துள்ளன. 


மேலும் படிக்க | என்னய்யா நடக்குது இங்க: விருந்தில் தாத்தா செஞ்ச வேலையால் ஷாக் ஆன நெட்டிசன்கள் 


உடலை குளிர்விப்பதற்காக யானைகள் தங்கள் காதுகளை மடக்குவதைக் காணமுடிகிறது. குட்டி யானைகள் உருண்டு, புரண்டு விளையாடுகின்றன. இது குதூகலமாக வெப்பத்தை வெல்லும் வழியாக தோன்றுகிறது.


யானைகள் வெயிலும் தங்களை பாதுகாத்துக் கொள்வதற்கும், விளையாடுவதற்கும் தேர்ந்தெடுத்திருக்கும் இந்த வழி, அவற்றுக்கு சந்தோஷத்தைக் கொடுப்பது இந்த வீடியோவில் தெரிகிறது. 


சேற்றில் உள்ள விலங்குகளைப் பார்த்தால், குழந்தைத்தனமாய் இப்படி விளையாடும் யானைகளுக்கா மதம் பிடிக்கும் என்ற ஆச்சரியமும் ஏற்படுகிறது.