என்னய்யா நடக்குது இங்க: விருந்தில் தாத்தா செஞ்ச வேலையால் ஷாக் ஆன நெட்டிசன்கள்

Funny Old Man Video: நாம் நினைத்துகூட பார்க்க முடியாத ஒரு வேலையை செய்யும் ஒரு முதியவரின் வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : May 4, 2022, 05:05 PM IST
  • நாம் நினைத்துகூட பார்க்க முடியாத செயலை செய்த ஒரு நபர்.
  • டிஷ்யூவான சப்பாத்தி.
  • வைரலான வீடியோ.
என்னய்யா நடக்குது இங்க: விருந்தில் தாத்தா செஞ்ச வேலையால் ஷாக் ஆன நெட்டிசன்கள் title=

வைரல் வீடியோ: இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம்.

இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. 

சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. சமீப காலங்களில் திருமண வீடியோக்கள் பட்டையை கிளப்பி வருகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தை கலக்கி வருகின்றது.

சமூக ஊடகங்களில் மக்கள் வேடிக்கையான வீடியோக்களை பார்க்க விரும்புகிறார்கள். வேடிகையான வீடியோக்களுக்கு இணையத்தில் பஞ்சமுமில்லை. படைப்பாளிகள் பலர் கிராமம், நகரம் என அனைத்து இடங்களிலும் இதுபோன்ற வீடியோக்களை படம்பிடித்து பின்னர் இணையத்தில் பதிவேற்றுகிறார்கள். 

பெரும்பாலான கிராமங்களில் இன்றும் பஃபே முறைக்கு பதிலாக, மேஜைகளில் உணவு பரிமாறப்படுகிறது. மக்கள் அதை மிகவும் விரும்புகிறார்கள். இருப்பினும், பல இடங்களில், நகரத்தைப் போலவே, கிராமங்களிலும் பஃபே முறையின் போக்கு காணப்படுகிறது. சில நேரங்களில், உணவு உண்ணும் போது பல வேடிக்கையான சம்பவங்களும் நடப்பதுண்டு. இவற்றை பார்த்தால் நம்மால் சிரிப்பை அடக்க முடியாது. நாம் நினைத்துகூட பார்க்க முடியாத ஒரு வேலையை செய்யும் ஒரு முதியவரின் வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. 

மேலும் படிக்க | கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா: கில்லி பட ஸ்டைலில் ஒரு வைரல் வீடியோ 

தாத்தா செய்த காரியம் 

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோ-வில், திருமணம் ஒன்று நடப்பதையும், அதில் திருமண விருந்து நடந்துகொண்டிருப்பதையும் காண முடிகின்றது. அனைவரும் ருசியான உணவை ரசித்து சாப்பிட்டுக் கொண்டிருக்கின்றனர். மேஜையில் அமர்ந்துள்ள ஒரு முதியவர் அனைத்து பண்டங்களையும் ரசித்து சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார். 

சாப்பிட்டு முடித்து கையைத் துடைக்கும் நேரம் வந்ததும் அந்த முதியவர் மிக வினோதமாக நடந்து கொள்வதை வீடியோவில் காண முடிகின்றது. அவர் சப்பாத்தியை டிஷ்யூ பேப்பராக கருதி வாயை சுத்தம் செய்து கொள்கிறார். இந்த வீடியோவை பார்ப்பவர்களால் அவருடைய செயலைக் கண்டு அதிர்ச்சி அடையாமல் இருக்க முடியாது. இந்த வீடியோவுக்கு பல்வேறு விதமான கமெண்டுகளும் வந்த வண்ணம் உள்ளன. 

சப்பாத்தி டிஷ்யூ பேப்பர் ஆன வீடியோவை இங்கே காணலாம்:

நெட்டிசன்களால் சிரிப்பை அடக்க முடியவில்லை

சமூக வலைதளவாசிகளும் முதியவரின் இந்த செயலால் ஆச்சரியமடைந்துள்ளனர். இந்த வீடியோவை பார்ப்பவர்களால் சிரிப்பை நிறுத்த முடியவில்லை. பெரும்பாலான பயனர்கள் இதன் கமெண்ட் பாக்சில் சிரிக்கும் ஈமோஜிகளை அள்ளி வீசி வருகின்றனர். இந்த வீடியோ sensen4947 என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த வீடியோவுக்கு இதுவரை ஆயிரக்கணக்கான வியூஸ் கிடைத்துள்ளது. 

மேலும் படிக்க | Viral Video: முதலையிடம் சிக்கிய வரிக்குதிரைக் கூட்டம்; மன பதற வைக்கும் காட்சி 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News