மோமோஸ் டீ வைரல் வீடியோ: சிலருக்கு காலையில் ஒரு கோப்பை தேநீர் குடிக்கவில்லை என்றால் தூக்கமே கலையாது. இது தவிர மாலையிலும் தேநீர் அருந்தும் பழக்கம் பலரிடம் இருக்கிறது. பொதுவாக பால் டீயைத் தவிர, நீங்கள் அனைவரும் மசாலா டீ முதல் லெமன் டீ வரை வெவ்வேறு சுவை கொண்ட தேநீர்களை முயற்சித்திருக்க வேண்டும். ஆனால் நீங்கள் எப்போதாவது மோமோஸ் டீ குடித்திருக்கிறீர்களா? நிச்சயமாக இது போன்ற தேநீரின் பெயரை நீங்கள் முதல்முறையாக இப்போது தான் கேட்டிருக்க வேண்டும். ஏனெனில் இங்கு உணவு பதிவர் ஒருவர் இந்த செய்முறையை (மோமோஸ் தேநீர்) முயற்சித்துள்ளார். அதன் வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை கண்டால் கட்டாயம் நீங்கள் ஒருகணம் அதிர்ச்சி அடைந்துவிடுவீர்கள். ஏனெனில் இஞ்சி சேர்க்கப்படும் தேநீரில் யாராவது மயோனீஸ், மோமோஸ் சட்னி மற்றும் மோமோஸ் சேர்த்தால், தேநீர் பிரியர்களுக்கு கடுப்புதான் வரும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மோமோஸ் தேநீரை இப்படி தான் தயாரித்துள்ளார்.....
இன்ஸ்டாகிராமில் மோமோஸ் தேநீரின் (Momos Tea) செய்முறையை (@foodiekashif) என்ற பயனர் பகிர்ந்துள்ளார். மேலும் இதற்கு தலைப்பாக "தேநீர் பிரியர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்" என்று எழுதி பதிவிட்டுள்ளார். அந்த நபர் முதலில் பால், தண்ணீர், டீ, சர்க்கரை சேர்த்து நன்றாக கொதிக்க வைத்ததை வீடியோவில் காணலாம். கொதி வந்ததும் அந்த நபர் மோமோஸை உடைத்து அதில் போடுகிறார். இது மட்டுமின்றி, அந்த நபர் பின்னர் டீயில் மயோனீஸ் மற்றும் மோமோஸ் சிவப்பு சட்னியை சேர்த்துள்ளார். பிறகு ஒரு கப்பில் தேநீரை வடிகட்டி சுவைத்துப் பார்க்கிறார். ஆனால் சுவை மிகவும் மோசமாக இருந்ததால், அவர் உடனடியாக துப்ப வேண்டியிருந்தது.


மேலும் படிக்க | சோப்பை சாப்பிடும் பெண்.. கடைசி வரை வீடியோவை பாருங்கள் ஷாக்கா இருக்கும்


வீடியோவால் கடுப்பான இணையவாசிகள்:
சமூக வலைதளங்களில் மோமோஸ் தேநீர் வீடியோவைப் (Viral Video In Tamil) பார்த்த இணைய மக்கள் கோபமடைந்தனர். பெரும்பாலானோர் பதிவரைப் பற்றி நல்லதும் கெட்டதும் பேசினார்கள். ஒருவர் கருத்து தெரிவித்து- "இது மட்டும் தான் இன்னும் பார்க்க வேண்டியிருந்தது" என்றார். மற்றொருவர் – "என்ன கருமம் டா இது, மோமோஸை ஏண்டா வீண் பண்ற" என்று எழுதினார். அதே நேரத்தில், மற்றொரு பயனர்- "அட பாருடாப் இதுதான் இப்போதைக்கு தேவையான புது கண்டுபிடிப்பு" என்றார்.


மோமோஸ் தேநீர் செயல்முறை வீடியோவை இங்கே காணுங்கள்:



இன்றைய வீடியோ வைரல்:
இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்ட சிறிது நேரத்தில் மிகவும் வைரலானது. மேலும் இதுவரை இந்த வீடியோவை 1.2 மில்லியனுக்கும் அதிகமானோர் கண்டுள்ளனர். அதுமட்டுமின்றி இந்த வீடியோவுக்கு ஏராளமான லைக்குகள் மற்றும் கருத்துகளை மக்கள் பதிவிட்டு வருகின்றது. மேலும் இத்தகைய வினோதமான உணவு சேர்க்கைகளைப் பற்றி உங்களின் கருத்து என்ன என்பதை எங்களுடன் பகிர்ந்துக்கொள்ளுங்கள்.


(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.) 


மேலும் படிக்க | இந்த வீடியோவை பாருங்க.. இனி வெளிய வாங்கியே சாப்பிடவே மாட்டீங்க


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ