வைரல் வீடியோ: சமூக ஊடக உலகம் ஆச்சரியமான விஷயங்களால் நிரம்பியுள்ளது. இங்கே நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அனைத்தையும் பார்க்கிறோம். இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. திருமண வீடியோகளுக்கென இணையத்தில் ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

திருமணங்களின் இலட்சக்கணக்கான வீடியோக்கள் இணையத்தில் பதிவேற்றப்படுகின்றன. ஆனால் இவற்றில் சில திருமண வீடியோக்கள் மக்கள் மனங்களில் நீங்கா இடம் பெற்று விடுகின்றன. இவை உடனே பலரால் பகிரப்பட்டு வைரலும் ஆகின்றன. திருமண வீடியோக்களில் நாம் பல வித காட்சிகளை காண்கிறோம். திருமணம் என்றாலே மகிழ்ச்சி, கோலாகலம் தான். இது மணமக்களின் வாழ்வில் மிக முக்கியமான தருணமாக இருப்பதோடு மட்டுமல்லாமல், இரு குடும்பங்களின் சங்கமமாகவும் உள்ளது. பல உறவுகளும் நட்புகளும் சேர்ந்து மகிழ்ந்து அனுபவிக்கும் கோலாகலமான கொண்டாட்டமாக இது இருக்கின்றது.  சில சமயம் திருமண ஜோடிகள் அழகாக நடனமாடுவதையும், சில சமயம் காதல் வசனங்கள் பேசுவதையும், சில சமயம் முத்தங்களை பரிமாறிக்கொள்வதையும் நாம் பார்த்துள்ளோம். 


பல திருமண வீடியோக்களை (Viral Video) பார்த்தால் நம்மால் சிரிப்பை அடக்க முடியாது. அப்படி ஒரு வீடியோ சமீபத்தில் இணையத்தில் பகிரப்பட்டுள்ளது. ஆனால் இந்த வீடியோவை பார்த்தால் சிரிப்பு மட்டும் வரவில்லை, சற்று சோகமாகவும் உள்ளது. இங்கு நடந்த விஷயத்தை பார்த்தால் இப்படி கூட நடக்குமா என்ற கேள்வி எழுகிறது. இதை பார்த்த பல நெட்டிசன்ஸ் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். 


ஒரு திருமணம் நடப்பதை வீடியோவில் பார்க்க முடிகின்றது. திருமணத்தில் விருந்தினர்கள் சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறார்கள். அப்போது சிலருக்கு தங்கள் சாப்பாட்டில் பனீர் இல்லாததால் கடுமையான கோவம் வந்தது. அவர்கள் பெண் வீட்டாரிடம் இது பற்றி கேட்டுள்ளனர். அவர்கள் பதில் சொன்னது இவர்களுக்கு ஒப்புக்கொள்ளும்படி இல்லை. இரு தரப்பிற்கும் இடையில் வாக்குவாதம் நடந்துள்ளது. 


மேலும் படிக்க | பென்குயினை இரையாக்க துடித்த கடல் சிறுத்தை... தண்ணி காட்டிய கில்லாடி பென்குயின்!


வாக்குவாதம் வலுக்கவே இரு தரப்பும் கைகலப்பில் ஈடுபட்டது. ஒருவர் மீது ஒருவர் நாற்காலிகளை தூக்கி வீசிக்கொண்டனர். கல்யாண மண்டபமே போர்க்களமாக காட்சியளிக்கின்றது. அதன் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த காணொளியை பார்த்த நெட்டிசன்கள் சிரிப்பை கட்டுப்படுத்த முடியாமல் திணறுகின்றனர். ஆனால், மனிதர்களுக்கு பொறுமை என்ற உணர்வே இல்லாமல் போய்விட்டதா என்ற கேள்வியும் எழுகிறது. 


திருமணத்தில் நடந்த ரணகளத்தின் வீடியோவை இங்கே காணலாம்



வீடியோ இணையத்தில் வைரல் ஆனது


இந்த வீடியோ சமூக ஊடக தளமான எக்ஸ் -இல் @gharkekalesh என்ற பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இதற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்து வருகின்றன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். 


(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)


லும் படிக்க | அருவியில குளிக்கும்போது எச்சரிக்கை அவசியம்! நொடியில் மாறிய தலைவிதி! சோக வீடியோ வைரல்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ