அருவியில குளிக்கும்போது எச்சரிக்கை அவசியம்! நொடியில் மாறிய தலைவிதி! சோக வீடியோ வைரல்

Rare Video of  waterfall: ட்விட்டரில் பகிரப்படுள்ள நீர்வீழ்ச்சி வீடியோ வைரலாகிறது. நீர்வீழ்ச்சியில் குளித்துக் கொண்டிருந்தவர்களின் நிலை என்ன ஆயிற்று? வீடியோவைப் பாருங்கள்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Dec 20, 2023, 09:39 PM IST
  • ட்விட்டரில் பகிரப்படுள்ள நீர்வீழ்ச்சி வீடியோ
  • குளித்துக் கொண்டிருந்தவர்களின் நிலை என்ன?
  • இயற்கையின் அபாயங்கள்! வீடியோ வைரல்
அருவியில குளிக்கும்போது எச்சரிக்கை அவசியம்! நொடியில் மாறிய தலைவிதி! சோக வீடியோ வைரல் title=

நீர் அருவியாக கொட்டுவதைப் பார்க்கும் சந்தர்ப்பங்கள் நகரத்தில் வாழ்பவர்களுக்கு அரிது என்பதால், அருவியைப் பார்க்கும்போது ஒரு இனம் புரியாத பரவசம் ஏற்படும். நீர்வீழ்ச்சிகளை ரசிப்பது மட்டுமல்ல, அதைப் பார்த்ததும் குளிக்க வேண்டும் என்ற ஆவல் எழாமல் இருக்குமா? அருவியை கீழிருந்து பார்த்தால் நீர் எங்கிருந்து விழுகிறது என்று தெரியாமல் இருந்தால், அந்த நீர் வீழ்ச்சிகளை ஆகாய கங்கை என்று சொல்வார்கள். அற்புதமான நீர்வீழ்ச்சியின் பேரழகை நேரில் சென்று ரசிக்க வேண்டும் என்ற ஏக்க பலருக்கும் இருக்கும். அந்த ஏக்கம் சில சமயத்தில் ஏக்கமாகவே இருந்து விடுவது நல்லது தான்.

ஏன் ஆசையை நிறைவேற்றிக் கொள்ள வேண்டாம் என்று சொல்கிறார்கள் என்று சிந்திக்கிறீர்களா? சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் வீடியோவைப் பார்த்தால் அருவியின் அழகுக்கு பின் நிறைந்திருக்கும் ஆபத்து, பேராபத்து என்பது புரியும். வீடியோவை பார்த்தால், ஆரம்பத்தில் ரசிக்கலாம்... ஆனால், முடிவில்?

வைரல் வீடியோ...

ட்விட்டரில் பகிரப்படுள்ள  இந்த வீடியோவைப் பார்த்தால் பயமாக இருக்கிறது. நீர்வீழ்ச்சியில் குளித்துக் கொண்டிருந்தவர்களின் நிலை என்ன ஆயிற்று? தெரியவில்லை.

மேலும் படிக்க | கழுகிடம் சிக்கி பாடாய்படும் பாம்பு தப்பித்ததா: வைரல் வீடியோ

அருவிக்கு அடியில் ஜாலியாய் நின்றுக் கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர்கள், அடுத்த நொடி என்ன நடக்கும் என்பதை நினைத்து பார்த்திருக்க மாட்டார்கள். திடீரென பாறை ஒன்று அருவியில் இருந்து கீழே விழுவதை காணலாம். நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவுக்கு ஏற்படும் அதிர்ச்சி தருணத்தை அங்கிருந்தவர்கள் எப்படி சமாளித்தார்கள். 

நீர்வீழ்ச்சியின் கீழ் ஒன்றாக குளித்து மகிழ்ந்திருக்கும் சமயத்தில் எதிர்பாராத விபத்து நடந்தது அதிர்ச்சியாக இருக்கிறது. இயற்கைக் காட்சிகளை படம் பிடித்துக் கொண்டிருந்த ஒருவர், இந்த அதிர்ச்சி வீடியோவை படம் பிடித்திருக்கிறார். வித்தியாசமான வீடியோவை பகிரும் நெட்டிசன்களில் அவரும் ஒருவராக இருந்திருப்பார்.

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில், மலைக்கு கீழே உள்ள இயற்கை நீரூற்றில் சிலர் எப்படி குளிக்கிறார்கள் என்பதை பார்க்கலாம். எல்லாவற்றையும் மறந்து அந்த தருணத்தை அனுபவித்துக் கொண்டிருந்தவர்களுக்கு ஏற்படும் திடீர் அதிர்ச்சி நமக்கும் ஏற்படுகிறது.

மேலும் படிக்க | பாம்புடன் விளையாடும் பாப்பா: இணையத்தை பதற வைத்த பகீர் வைரல் வீடியோ

அருவியில் ஒரு பெண் உட்பட நான்கு பேர் இருப்பதை பார்க்கலாம். திடீரென மலையின் உச்சியில் இருந்து சத்தத்துடன் பாறை ஒன்று விழுகிறது. பாறையில் இருந்து தூசி ஒரு நபர் மீது விழுந்தது போல் தெரிகிறது. பாறை விழுந்தவுடன், அங்கு  இருந்தவர்களிடையே பதற்றம் தொற்றிக் கொள்கிறது. அங்கும் இங்கும் ஓட ஆரம்பிக்கிறார்கள். அடுத்து என்ன நடந்தது என்று தெரியவில்லை. அது சஸ்பென்சாகவே இருக்கிறது. 

பாறையே விழுந்தது
இந்த வீடியோ எங்கு, எங்கு எடுக்கப்பட்டது என்பது குறித்து தற்போது எந்த தகவலும் இல்லை. இந்த காணொளி கொஞ்சம் பழையது போல் தெரிகிறது. இந்த வீடியோ @1000waystod1e என்ற X கணக்கில் பதிவேற்றப்பட்டது. சில வினாடிகள் மட்டுமே கொண்ட இந்த வீடியோவுக்கு நிறைய ரியாக்ஷன்கள் வருகின்றன.

(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)

மேலும் படிக்க | Viral Video: சிங்கம் வேட்டையாடி பார்த்திருப்பீங்க... ஜாலியா பந்து விளையாடி பார்த்திருக்கீங்களா

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News