உத்தரகாண்ட் மாநிலத்தின் பாகேஸ்வர் மாவட்டத்தில் உள்ள நந்தா கோட் மலையின் தெற்கு பகுதியில் அமைந்திருக்கும் மலையில் உற்பத்தி ஆகும் நதி தான் சரயு.  இந்த நதி இதிகாசத்தில் இந்து கடவுள் ராமர் பிறந்த அயோத்தி நகரத்தின் வழியாக பாய்கிறது.  இந்த நதியின் வழியாக தான் ராமர் அயோத்தியில் இருந்து வைகுண்டத்திற்கு சென்று பின்னர் சொர்க்கத்தில் தெய்வமானதாகவும் இதிகாசத்தில் கூறப்பட்டு வருகிறது.  இதனை பலரும் புனித நீராக கருதி குளித்து வருவது வழக்கமான ஒன்றாகும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | இணையத்தை பற்ற வைத்த கியூட் நடனம்: ‘வாவ்’ என பாராட்டும் நெட்டிசன்கள்


இந்நிலையில் வழக்கம்போல இந்து கடவுளான ராமரின் பக்தர்கள் பலரும் இந்த புனித நதியில் இறங்கி கடவுளை வேண்டிக்கொண்டு நீராடி வந்தனர்.  அப்போது அவர்களுடன் ஒரு கணவன்-மனைவியும் சேர்ந்து குளித்துக்கொண்டு இருந்தனர்.  அப்போது அவர் எதார்த்தமாக அவரது மனைவிக்கு முத்தம் கொடுத்து இருக்கிறார், யாரும் கவனிக்கமாட்டார்கள் என நினைத்து அவர் செய்த காரியத்தை அந்த நதியில் குளித்துக்கொண்டிருந்த ராம பக்தர்கள் பார்த்துவிட்டனர்.  உடனே இந்த புனித நீரை, அசுத்தம் செய்துவிட்டதாக கருதி அவரை தாக்கி வன்முறையில் ஈடுபட்டுள்ளனர், தற்போது இந்த காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.


 



அந்த வீடியோவில் நதியில் கணவனும், மனைவியும் ஒன்றாக இருக்க, அவர்களை சூழ்ந்து கூட்டம் நிற்கிறது.  ஒருவர் வந்து அந்த பெண்ணின் கணவனை பிடித்து இழுக்கிறார், உடனே அந்த பெண் தனது கணவனை இழுக்கிறார்.  பின்னர் அனைவரும் ஒன்றுகூடி அவர்களை திட்ட ஆரம்பிக்கின்றனர், ஆத்திரத்துடன் பேசிக்கொண்டிருந்த அவர்கள் திடீரென்று அந்த நபரை தாக்க தொடங்குகின்றனர்.  பின்னர் அவரை தரதரவென கரைக்கு இழுத்துச்சென்று வருகின்றனர்.  பின்னர் அவரை கூட்டிக்கொண்டு அனைவரும் கூட்டமாக செல்வதுடன் வீடியோ நிறைவடைகிறது.  தற்போது இந்த காட்சி தான் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங்காகி வருகிறது.


மேலும் படிக்க | திருமணத்தில் மணமகன் செய்த வேலை: ஷாக் ஆன மணமகள், வீடியோ வைரல்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR