காதலனுக்கு மெசேஜ் அனுப்பிய மனைவி, டென்சனான கணவன்.. பின் நடந்தது என்ன? -வீடியோ
Husband Wife Fight Video: கள்ளக் காதலா? நண்பனா? மெசேஜ்-ஆல் கணவனும் மனைவியும் இடையே வந்த சண்டை. சமூக வலைதளங்களில் வீடியோ வைரலாகி வருகிறது.
கணவன் மனைவி வைரல் வீடியோ: கணவன் மனைவி இடயே சண்டை, சச்சரவு, வாக்கு வாதம் என்பது சகஜம். ஆனால் அது எல்லை மீறி போகும் போது என்ன நடக்கும் தெரியுமா? வாங்க தெரிந்துக்கொள்ளுவோம். சமூக வலைதளங்களில் கணவன்-மனைவி சண்டை குறித்த பல வீடியோக்கள் பகிரப்பட்டு வருகிறது. சமீபத்தில் அப்படி ஒரு வீடியோ வெளியாகி உள்ளது. இந்த வீடியோவில் கணவன் மனைவி இடையே கடும் வாக்குவாதம் நடக்கிறது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சிக்கிக்கொண்ட மனைவி
அந்த வைரல் வீடியோ குறித்து பார்ப்போம். அதாவது மனைவி அவனது காதலனுக்கு மெசேஜ் அனுப்பியதாக கூறப்படுகிறது. கள்ளக் காதனுக்கு மெசேஜ் அனுப்பும் போது சரியாக அங்க வந்த அவரது கணவர், தனது மனைவியை கையும் களவுமாக பிடித்துள்ளார். மாட்டிக்கொண்ட மனைவி, பயத்திலும், பதட்டத்திலும் என்ன செய்வது என்று தெரியாமல், கணவனை நோக்கி வாரத்தைகளை வீச ஆரம்பித்தார். இதையடுத்து இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, இறுதியாக வாய்த்தகராறு ஏற்படும் அளவுக்கு சம்பவம் பெரிதாகி விட்டது. இந்த வீடியோ வைரலானதையடுத்து, நெட்டிசன்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
மேலும் படிக்க - விமானத்தின் கழிவறையில் உடலுறவு கொண்ட ஜோடி! கையும்களவுமாக சிக்கிய வீடியோ!
தப்பு செய்தது யார்? திட்டு வாங்குவது யார்?
வீடியோவில் கணவனும் மனைவியும் ஒருவரையொருவர் வாரத்தையால் தாக்கிக் கொள்வதைக் காணலாம். அந்த பெண் தனது கணவர் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைப்பதை காணலாம். அவரின் மனைவி எனது பெற்றோர் நில உரிமையாளர்கள், எங்களிடம் நிறைய பணம் இருக்கிறது. உங்களை போன்று தெருவை கூட்டி வாழ்க்கை நடத்துபவர்கள் இல்லை நாங்கள், உங்கள் குடும்பத்டை விட எங்கள் குடும்பம் மிகவும் சிறப்பாக இருப்பதாக மனைவி கூறுகிறார். இந்த வீடியோவை இதுவரை மூன்று லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். அதே சமயம் இது குறித்து பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த காணொளி பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
நமக்குள்ளேயே பேசி பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும்
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதையடுத்து, இந்த பதிவிற்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஒரு பயனர், 'ஒரு பெண் இப்படி பேசக்கூடாது' என்று கூறியுள்ளார். மற்றொரு பயனர் 'ஏதேனும் பிரச்சனை இருந்தால் அது நமக்குள்ளேயே பேசி தீர்க்கப்பட வேண்டும்' என்று கூறியுள்ளார்.
மேலும் படிக்க - மேடையில் கிஸ் கொடுத்த மணமக்கள்: ‘செம கியூட்’.. பாராட்டும் நெட்டிசன்ஸ், வைரல் வீடியோ
இப்படிப்பட்ட மனைவி யாருக்கும் அமைக்கக்கூடாது
இது போன்ற பிரச்சனைகள் வரும் ஏற்று தான் நான் திருமணம் செய்து கொள்ள விரும்பவில்லை என ஒருவர் கமெண்ட் செய்துள்ளார். இப்படிப்பட்ட மனைவியை கடவுள் யாருக்கும் கொடுக்கக் கூடாது என்று ஒரு எழுதியுள்ளார். இந்த வீடியோ எப்பொழுதுஏ எடுக்கப்பட்டது என்பது பற்றிய எந்த தகவலும் இல்லை.
வாழ்க்கை அழகானது
கணவனும் மனைவியும் ஒருவரையொருவர் புரிந்து கொள்ளுதல், விட்டு கொடுத்து செல்லுதல், கோபமின்மை, சந்தேகமின்மை என தங்கள் வாழ்க்கையை வாழ்வது தான் சுவாரஸ்யங்கள். ஒருவரையொருவர் ஏமாற்றாமல், ஒத்தாசையாக இருந்து வாழ்க்கையை அனுபவித்து வாழுங்கள்.
மேலும் படிக்க - குத்தாட்டம் போட்டு இணையத்தை தெறிக்கவிட்ட புதுமண ஜோடி... சான்சே இல்ல: வைரல் வீடியோ!!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ