குத்தாட்டம் போட்டு இணையத்தை தெறிக்கவிட்ட புதுமண ஜோடி... சான்சே இல்ல: வைரல் வீடியோ!!

Funny Viral Video: திருமண மேடையில் குத்தாட்டம் போட்ட புதுமண ஜோடி. உடனே வைரல் ஆன வீடியோ.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Sep 10, 2023, 12:39 PM IST
  • இந்த வீடியோ சமூக ஊடக தாளமான இன்ஸ்டாகிராமில் weddingz.in என்ற கணக்கில் பகிரப்பட்டுள்ளது.
  • இதற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்து வருகின்றன.
  • இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள்.
குத்தாட்டம் போட்டு இணையத்தை தெறிக்கவிட்ட புதுமண ஜோடி... சான்சே இல்ல: வைரல் வீடியோ!! title=

வைரல் வீடியோ: மனித வாழ்க்கை பல வித இறுக்கங்களையும் பிரச்சனைகளையும் கொண்டது. தினம் தினம் பல வித இன்னல்களையும் சவால்களையும் சந்திக்கும் நாம் இவற்றிலிருந்து சிறிதளவு நிவாரணம் கிடைத்தாலும் நிம்மதி அடைகிறோம். சில விஷயங்கள் அவ்வப்போது நம்மை திசை திருப்பி நமக்கு ஒரு மாறுதலை அளிக்கின்றன. அத்தகைய விஷயங்களில் சமூக ஊடகங்களுக்கு ஒரு முக்கிய பங்குண்டு. இதில் வரும் செய்திகளும் வீடியோக்களும் நம்மை நம் கவலைகளை மறந்து சிரிக்க வைக்கின்றன, சில சிந்திக்கவும் வைக்கின்றன. 

சமூக ஊடகங்களில் பகிரப்படும் வீடியோக்களில் திருமண வீடியோக்களுக்கென தனி மவுசு உள்ளது. இந்த வீடியோக்களின் மூலம் நாட்டின் பல்வேறு இடங்களில் நடக்கும் பல விதமான திருமண சடங்குகளையும், அவற்றில் நடக்கும் வினோதமான விஷயங்களையும் காண முடிகின்றது. நம் நாட்டில் திருமணங்கள் திருவிழாக்களை போல கொண்டாடப்படுகின்றன. திருமணம் என்றாலே மகிழ்ச்சி, கோலாகலம் தான். 

திருமணங்கள் மணமக்களின் வாழ்வில் மிக முக்கியமான தருணமாக இருப்பதோடு மட்டுமல்லாமல், இரு குடும்பங்களின் சங்கமமாகவும் உள்ளது. பல உறவுகளும் நட்புகளும் சேர்ந்து மகிழ்ந்து அனுபவிக்கும் கோலாகலமான கொண்டாட்டமாக இது இருக்கின்றது. திருமண விழாக்களில் மறக்கமுடியாத பல நிகழ்வுகள் நடக்கின்றன. சில சமயம் திருமண ஜோடிகள் அழகாக நடனமாடுவதையும், சில சமயம் காதல் வசனங்கள் பேசுவதையும், சில சமயம் முத்தங்களை பரிமாறிக்கொள்வதையும் நாம் பார்த்துள்ளோம். மணமகனும், மணமகளும் தங்கள் திருமணத்தை மறக்கமுடியாததாக மாற்ற தனித்துவமான பல விஷயங்களைச் செய்கிறார்கள். அப்படி ஒரு ஜோடி செய்த ஒரு செயல் வைரலாக பரவி வருகிறது.

இன்றைய காலத்தில் நடன நிகழ்ச்சிகள் இல்லாத திருமணங்களையே காண முடிவதில்லை. அதுவும் மணமக்களே ஆடினால், மணமேடையே களைகட்டும். அப்படி களைகட்டிய ஒரு திருமணத்தின் வீடியோ தற்போது வைரல் ஆகி வருகின்றது. சல்மான் கான் மற்றும் சுஷ்மிதா சென் இணைந்து நடித்த "பிவி நம்பர் 1" என்ற இந்தி படத்தில் வரும் "சுன்னரி சுன்னனரி" என்ற கிளாசிக் பாடலுக்கு இந்த ஜொடி அட்டகாசமாக நடனம் ஆடுகிறார்கள். இந்த அற்புதமான நடனத்தை இணையவாசிகள் விரும்பி பார்த்து வருகிறார்கள். 

மேலும் படிக்க | இப்படியொரு சோம்பேறித்தனமா? வாய்க்குள்ள இருந்த உணவை கோட்டை விட்ட முதலை வீடியோ வைரல்

மணமக்களின் அட்டகாசமான நடன வீடியோவை இங்கே காணலாம்:

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Weddingz.in (@weddingz.in)

வீடியோ இணையத்தில் வைரல் ஆனது 

மிக அருமையான நடன அசைவுகளையும் டான்ஸ் ஸ்டெப்சையும் போட்டு இந்த ஜோடி ஆடும் ஆட்டம் உங்கள் இதயத்தைத் திருடாமல் இருக்காது. இருவரும் மிக அழகாக இணைந்து நடனம் ஆடுவது பார்க்க மிக நன்றாக உள்ளது. இந்த வீடியோ சமூக ஊடக தாளமான இன்ஸ்டாகிராமில் weddingz.in என்ற கணக்கில் பகிரப்பட்டுள்ளது. இதற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்து வருகின்றன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். 

இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் ஜோடியின் அற்புதமான நடனத்தை பாராட்டி வருகின்றனர். ஒரு பயனர், "பழைய பாடல்களும் இன்றைய நடன அசைவுகளும் சிறந்த கலவையாகும்." என எழுதியுள்ளார். "இந்த மணமகனுக்கும் மணமகளுக்கும் இடையில் உள்ள கெமிஸ்ட்ரி மிக அற்புதமாக உள்ளது' என மற்றொரு பயனர் கூறியுள்ளார். "இப்படி ஒரு வாழ்க்கைத் துணை கிடைத்தால், அனைவருக்கும் நல்ல திருமண வாழ்க்கை அமையும்" என்று ஒரு பயனர் கூறியுள்ள நிலையில், "இந்த ஜோடி இணையத்தையே அதிர வைத்துள்ளது' என மற்றொரு பயனர் கூறியுள்ளார்.

(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)

மேலும் படிக்க | ஆபத்தான பாம்பை அசால்ட்டாக டீல் செய்த பிரபல பவுலர்... ஜஸ்ட் மிஸ்ஸில் உயிர் தப்பித்தார்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News