கணவன் மனைவி வைரல் வீடியோ: சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகி வருகின்றன. இவற்றைக் கண்டு நெட்டிசன்கள் தங்கள் மன அழுத்தங்களை மறந்து ரசித்து சிரிக்கின்றனர். அந்தவகையில் சமீப காலங்களில் திருமண வீடியோக்கள், காதலர்களின் வீடியோக்கள், கணவன் மனைவி வீடியோக்கள், விலங்குகளின் வீடியோக்கள் போன்றவற்றை இணையத்தளத்தை கலக்கி வருகின்றன. அதிலும் கணவன் மனைவி வீடியோக்கள் எப்போதும் மிக விரைவாக வைரல் ஆகின்றன. கணவன் மனைவி வீடியோக்களுக்கு எப்போதும் ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றது. கணவன் மனைவி வீடியோக்களை இணையவாசிகள் மிகவும் விரும்பி பார்ப்பதுண்டு. அதன்படி தற்போது வெளிவந்துள்ள காணொளி இவை அனைத்தையும் விட வித்தியாசமானது. இந்த வீடியோ கணவன் மனைவி மற்றும் கள்ளக்காதலன் கதை தொடர்புடையதாகத் தெரிகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அந்த வகையில் இந்த சம்பவம் உத்தர பிரதேசத்தில் உள்ள கைலாஷ் மந்திர் நெடுஞ்சாலை பகுதியில் நடந்து உள்ளது. கள்ளக்காதலனுடன் டேட்டிங் சென்ற மனைவி தொடர்பான வீடியோ இது. இந்த காதல் ஜோடிகளை கணவர் பின் துரத்தி பின்தொடர்ந்தார், பின்னர் அவர் செய்ததை யாரும் பார்த்திருக்க மாட்டார்.


'மேலும் படிக்க | மலைப்பாம்புக்கு ஒரு மரியாதை வேண்டாம்? இப்படியா கொஞ்சறது: ஷாக்கிங் வைரல் வீடியோ


மனைவியும் காதலரும் கையும் களவுமாக பிடிபட்டனர்
அந்த வீடியோ வெளியான சில நொடிகளில், ஸ்கூட்டியில் மனைவியையும், காதலனையும் பார்த்த கணவன், முதலில் முழு சம்பவத்தையும் கேமராவில் படம் பிடிக்க திட்டமிட்டிருந்ததைக் காணலாம். கேமராவை ஆன் செய்வதன் மூலம், கணவன் நேரடியாக மனைவி மற்றும் அவரது காதலன் ஸ்கூட்டியில் ஏறியதைக் காணலாம். தன் மனைவி மாதிரியே இருந்ததும், இவர் பைக்கை துரத்தி சென்றுள்ளார். இதனால் பைக்கை வேகமாக துரத்தி சென்று.. ஏ நிறுத்து நிறுத்து என்று கூறி பைக்கை மடக்கி பிடித்து உள்ளார். பின்னால் இருந்த பெண் ஷாலை எடுத்து முகத்தை மூடிக்கொண்டு இருந்துள்ளார்.


இதையடுத்து அதை நீக்க சொல்லி அங்கேயே கணவன் சண்டை போட்டார். இதை அடுத்து அந்த பெண் மாஸ்க்கை திறந்து பார்த்தார். பைக்கில் போனது தன் மனைவிதான் என்று அவருக்கு தெரிய வந்துள்ளது. பின்னர் அந்த கணவர் அங்கேயே சண்டை போட்டதால் அங்கே கூட்டம் கூடி பெரிய பரபரப்பு ஏற்பட்டது.


மனைவியின் காதலன் வீடியோவை இங்கே பாருங்கள்



இந்த வீடியோ இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் வைரலானது அனைவரும் அறிந்ததே. இது giedde என்ற பக்கத்திலும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதற்கு தலைப்பு காதலனுடன் சேர்ந்து ஸ்கூட்டியில் சென்ற மனைவியை கணவர் கையும் களவுமாக பிடித்ததாக வைக்கப்பட்டுள்ளது.


மேலும் படிக்க | கிணற்றுக்குள் விழுந்த பூனையின் திக் திக் நிமிடங்கள்.. வைரலாகும் வீடியோ!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ