நடிகர் பிரபு தேவா நடிப்பில் உருவாகி வரும் 'சார்லி சாப்ளின்-2' திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள I Want To Marry You Mama பாடல் வெளியாகியுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அம்மா கிரியேஷன்ஸ் தயாரிப்பில் சக்தி சிதம்பரம் தயாரித்து வரும் திரைப்படம் சார்லி சாப்ளின்-2. இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ள நிலையில் தற்போது இப்படத்தில் இடம்பெற்றுள்ள I Want To Marry You Mama என்னும் பாடலினை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.


கடந்த 2002-ஆம் ஆண்டு திரைக்கு வந்த சார்லிசாப்ளின் திரைப்படதிதன் இரண்டாம் பாகமான இத்திரைப்படத்தில், முதல் பாகத்தின் கதாநாயகன் பிரபுதேவா, இரண்டாம் பாகத்திலும் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நிக்கி கல்ராணி, அடா சர்மா நடிக்கின்றனர். இவர்களுடன் அரவிந்த் ஆகாஷ், விவேக் பிரசன்னா, செந்தில், ரவிமரியா மற்றும் பலரும் நடிக்கிறார்கள். வில்லன்களாக தேவ் கில், சமீர் கோச்சார் நடிக்கின்றனர்.



இப்படத்திற்கு அம்ரீஷ் இசையமைக்கிறார். ஷக்தி சிதம்பரம் கதை-திரைக் கதை-வசனம் எழுதி இயக்குகிறார். இந்த படத்திற்கா பிரபல நாட்டுபுற பாடகர்கள் செந்தில் கணேஷ் - ராஜலட்சுமி ஜோடி பாடிய ஒரு பாடல் வழங்கப்பட்டு, பின்னர் படமாக்கப்பட்டு சக்கை போடு போட்டது. இந்நிலையில் தற்போது இந்த படத்தில் இடம்பெற்றுள்ள இரண்டாவது பாடலினை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.


இப்பாடலுக்கு யுகபாரதி பாடல் வரிகள் எழுதியுள்ளார். ஜகதீஷ் குமார், பார்கவி பாடல் பாடியுள்ளனர்.