‘Cop of the month’ விருது வாங்கி வைரல் ஆகும் சூப்பர் dog
பஸ்தரின் ஆபத்தான பாதைகளை பாதுகாக்க பாதுகாப்பு படையினருக்கு உதவுவதில் நாய்களின் அணியின் பங்கு முக்கியமானது.
சத்தீஸ்கரின் ராய்கர் மாவட்டத்தில் முதன்முறையாக, இரண்டு காவல்துறையினருடன் சேர்ந்து ஒரு போலீஸ் ஸ்னிஃபர் நாய்க்கு 'Cop of the month’ அதாவது அந்த மாதம் மிகச் சிறப்பாக பணிபுரிந்த காவல்துறை வீரர் என்ற கௌரவம் வழங்கப்பட்டுள்ளது. ரூபி என்ற அந்த நாய், சாரங்கர் ராயல் அரண்மனை கொள்ளை வழக்கு உட்பட பல வழக்குகளில் முக்கியமான தடயங்களை கொடுத்து வழக்குகள் முடிவுக்கு வர முக்கிய பங்கு வகித்துள்ளது.
செய்தியாளர்களிடம் பேசிய ராய்கர் காவல்துறை கண்காணிப்பாளர் (எஸ்.பி.) சந்தோஷ் சிங், “ஒவ்வொரு மாதமும் சிறப்பான முறையில் பணியாற்றும் காவல்துறையினர் ‘Cop of the month’ என்ற பட்டத்தை வழங்கி ஊக்குவிக்கப்படுகிறார்கள். அவரது புகைப்படங்கள் வெவ்வேறு காவல் நிலையங்களில் வைக்கப்பட்டு அவர்களுக்கு ரொக்கப் பரிசுகளும் வழங்கப்படும்” என்று கூறினார்.
"இந்த மாதம் சட்டப் பிரிவைச் சேர்ந்த ஒரு போலீஸ் அதிகாரி மற்றும் நாயைக் கையாளும் வீரேந்தர் என இரண்டு போலீஸ் அதிகாரிகளுக்கு இந்த விருது வழங்கப்பட்டது. அவர்களைத் தவிர, எங்கள் டிராக்கர் நாயான ரூபிக்கும் இந்த விருது வழங்கப்படுகிறது” என்று எஸ்.பி. கூறினார்.
சாரன்கர் காவல் நிலையத்தின் (Police Station) கீழ் உள்ள சாரன்கர் ராஜ் மஹாலில், சுமார் 6 லட்சம் ரூபாய் மதிப்புள்ள விலை உயர்ந்த இரண்டு வெள்ளி தட்டுகள் திருடப்பட்டன. ரூபியின் உதவியுடன் வீரேந்திர அவற்றை மீட்டு குற்றம் சாட்டப்பட்டவர்களைப் பிடித்தார்.” என்று அவர் மேலும் கூறினார்.
ALSO READ: பிரமிடு முன் கவர்ச்சியாக போட்டோஷூட் செய்த மாடல், போட்டோகாரர் கைது!
குறிப்பாக, ஸ்னிஃபர் நாய்களுக்கு (Sniffer Dogs) வெடிபொருட்கள், சட்டவிரோத மருந்துகள், வனவிலங்கு எச்சங்கள், ரூபாய் நோட்டுகள், நாணயம், இரத்தம் மற்றும் சட்டவிரோத மொபைல் போன்கள் போன்ற தடைசெய்யப்பட்ட மின்னணுவியல் போன்ற பொருட்களைக் கண்டறிய அவற்றின் புலன்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.
ஒரு ட்வீட்டில், சத்தீஸ்கர் காவல்துறை இந்த ஸ்னிஃபர் நாய்களின் பங்கை அங்கீகரித்து, "பஸ்தாரின் ஆபத்தான பாதைகளை பாதுகாக்க பாதுகாப்பு படையினருக்கு உதவுவதில் நாய்களின் அணியின் பங்கு முக்கியமானது. அவற்றில், புதரு, ஓமு, பைஜு மற்றும் பூரி போன்ற உள்நாட்டு இனங்களின் ஸ்னிஃபர் நாய்கள் 20 அடி தூரத்திலிருந்தும் ஐ.இ.டி. (IED) களைக் கண்டறிகின்றன” என்று எழுதியுள்ளது.
நாய் நன்றியுள்ள விலங்கு என்பது அனைவருக்கும் தெரியும். அவ்வப்போது அப்படிப்பட்ட விலங்குகளை இந்த வகையில் அங்கீகரித்து கௌரவிப்பது அவர்களுக்கு நாம் காட்டும் அங்கீகாரத்தின் ஓர் அடையாளமாகும்.
ALSO READ: Viral News: கல்யாண சமையல் சாதம், இனி வீடு வந்து சேரும், இது கொரோனா கல்யாணம்!!
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR