Viral Video: சத்தமாக சுவாசிக்கும் மரம்... இணையத்தை அதிர வைத்த அதிசய வீடியோ
இயற்கையில் நடக்கும் அற்புதமான நிகழ்வுகள் பல, நமக்கு ஆச்சரியத்தையும் வியப்பையும் அள்ளிக் கொடுக்கின்றன. அந்த வகையில் மிக வினோதமான அதேசமயம் நம்ப முடியாத வகையிலான வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. ஆம் மரம் ஒன்று மூச்சு விடும் வீடியோ, இணையவாசிகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
இயற்கையில் நடக்கும் அற்புதமான நிகழ்வுகள் பல, நமக்கு ஆச்சரியத்தையும் வியப்பையும் அள்ளிக் கொடுக்கின்றன. அந்த வகையில் மிக வினோதமான அதேசமயம் நம்ப முடியாத வகையிலான வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. ஆம் மரம் ஒன்று மூச்சு விடும் வீடியோ, இணையவாசிகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
மரம், செடி, கொடிகளுக்கு உயிர் உள்ளது என நாம் பாடப்போகத்தகத்தில் படித்திருப்போம். மரங்கள் கார்பன் டை ஆக்சைடு வாயுவை எடுத்துக் கொண்டு, ஆக்ஸிஜனை வெளியிட்டு சுற்றுச்சூழலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது. மரங்கள் வளரவும், காய் கனிகளை கொடுக்கவும் கார்பன் டையாக்சைடு அவசியம். அந்த வகையில் மரங்கள் சுவாசித்து, நமக்கு உணவையும் சுத்தமான காற்றையும் கொடுத்து நம் வாழ்க்கைக்கு ஆதாரமாக இருக்கின்றன. சுவாசிப்பது வெளியே தெரியாமல் இருக்கும் நிலையில், இப்போது மரம் சுவாசிக்கும் வீடியோ ஒன்று, இணையவாசிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.
சில நாட்களுக்கு முன்னால், பூமி மூச்சு விடும் வீடியோ (Viral Video) ஒன்று வைரலான நிலையில், இப்போது மரம் ஒன்று மூச்சு விடும் வீடியோ வைரலாகி வருகிறது. வைரல் வீடியோவில், ஒரு மரம் ஒன்று தன்னைப் பிளந்தபடி சத்தத்துடன் மூச்சு விடுவதைப் போல் காணலாம். இரண்டாகப் பிளந்து, மரம் மூச்சு விடுவதை காண உண்மையில் ஆச்சரியம் மேலிடுகிறது. இந்த வீடியோ கனடாவில் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அறிவியல் வல்லுனர்கள் இது குறித்து கூறுகையில், மிக பலமான காற்று, அல்லது இயற்கைக்கு மாறான வகையில் பூமியில் ஏற்படும் அதிர்வு அல்லது அசைவு காரணமாக, இந்த நிகழ்வு ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறுகின்றனர். பூமியின் அதிர்வு அல்லது காற்றின் விசை, மரத்தை தாக்கும் போது, இவ்வாறு நிகழலாம் என்கின்றனர். இயற்கையின் இந்த அதிசயம், சமூக ஊடகத்தில் மிகவும் வைரலாகி வருகிறது. நெட்டிசன்களை வியக்க வைத்த அந்த வைரல் வீடியோவை கீழே காணலாம்.
மரம் மூச்சு விடும் வைரல் வீடியோவைக் கீழே காணலாம்:
மேலும் படிக்க | மூச்சுவிடும் பூமி... இணையத்தில் வைரலாகும் அதிசய வீடியோ: மிஸ் பண்ணாம பாருங்க
கனடா நாட்டின் கால்கேரியில் கனமழையின் போது, காட்டில் நிகழ்ந்த இந்த அற்புதமான தருணத்தை படம்பிடித்த ஒருவர் இந்த வீடியோவை சமூக வலைதளத்தில் பகிர்ந்த நிலையில், இது மிகவும் வைரலாகியுள்ளது. மரங்கள் செடிகள், ஆறுகள், மலைகள் உள்ளிட்ட இயற்கை வளங்களை காக்க வேண்டும் என இயற்கை ஆர்வலர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், உயிருள்ள மரங்களையும் செடிகளையும் காத்து இயற்கையை போற்றுவோம்.
மேலும் படிக்க | Viral Video : “காலுக்கு மசாஸ் பண்ணு...” பாகனிடம் செல்லமாக சேட்டை செய்த யானை!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ