எம்எஸ் தோனியின் ஆலோசனை இந்திய வீரர்களின் நம்பிக்கையை அதிகரிக்கும் என்று விராட் கோலி நம்பிக்கை தெரிவிக்கும் வீடியோ வைரலாகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இன்று கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகவும் முக்கியமான நாள். இன்று, ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 24) நடைபெறவிருக்கும் ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை 2021 போட்டியில் (ICC Men's T20 World Cup 2021) இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையேயான போட்டிகள் நடைபெறவிருக்கிறது.


அதற்கு சில மணி நேரத்திற்கு முன்னதாக, விராட் கோலிக்கு பேட்டிங் டிப்ஸ் வழங்கினார் இந்திய அணியின் ஆலோசகரும், முன்னாள் கேப்டனுமான எம்எஸ் தோனி. அந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகிறது. 



தோனியும் கோஹ்லியும் மிகவும் நெருக்கமாக இயல்பாக பேசிக்கொள்வதை காட்டும் இந்த வீடியோவை பார்க்கும் நிபுணர்கள், இந்திய அணிக்கு வழிகாட்டியாக தோனி இருப்பது ஒரு கேம்சேஞ்சராக இருக்கும் என்று கருத்து தெரிவிக்கின்றனர்.


உலகக் கோப்பைக்குப் பிறகு T20I கேப்டன் பதவியில் இருந்து விலக உள்ள கோஹ்லி, போட்டிக்கு முந்தைய ஊடக உரையாடலின் போது, டீம் இந்தியா வழிகாட்டியாக தோனி நியமிக்கப்பட்டது குறித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.


Also Read | ஊடகவியலாளர்களின் இந்த கேள்விக்கு கடுப்பான விராட் கோலி


இந்திய அணிக்காக விளையாடத் தொடங்கியபோது தற்போதைய அணியில் உள்ள பெரும்பாலான வீரர்களுக்கு தோனி வழிகாட்டியாக இருந்தார் என்று கோஹ்லி கூறினார்.
"அவர் மகத்தான அனுபவத்தைப் பெற்றுள்ளார். அவர் மிகவும் உற்சாகமாக இருக்கிறார். அவர் அணியுடன் இருந்தபோது மட்டுமல்ல, எப்போதுமே எங்கள் அனைவருக்கும் வழிகாட்டியாக இருந்தார்” என்று கோஹ்லி பத்திரிகையாளர் சந்திப்பில் தோனியை பற்றிய தனது கருத்தை பகிர்ந்துக் கொண்டார்.


 எம்எஸ் தோனியின் ஆலோசனை இந்திய வீரர்களின் நம்பிக்கையை அதிகரிக்கும் என்று விராட் கோலி நம்பிக்கை தெரிவித்தார்.  


"வாழ்க்கையின் ஆரம்ப கட்டங்களில் தங்கள் முதல் பெரிய போட்டிகளில் விளையாடும் இளம் வீரர்களுக்கு தோனி ஒரு உந்துசக்தியாக இருப்பார். சிக்கலான விஷயங்களை கையாவதில் அவரது நடைமுறை ஆலோசனைகளுக்கான ஒன்று அல்லது இரண்டு சதவீதம் விளையாட்டை மேம்படுத்த உதவும்" என்று கோஹ்லி குறிப்பிட்டார்.


Also Read | இறந்த கணவரின் சாம்பலை தினமும் சாப்பிடும் விநோதமான மனைவி


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR