இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கீதாஞ்சலி ராவ், தனது 15 வயதில் பல சாதனைகளைச் செய்துள்ளார். பிரபலமான டைம் இதழ் அவரை 'ஆண்டின் சிறந்த குழந்தை' என்று அழைத்து தன் அட்டைப் பக்கத்தில் அவர் படத்தை வெளியிட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 15 வயதான கீதாஞ்சலி ராவ், இப்போது அனைவராலும் வியந்து பாராட்டப்படுகிறார்.


கீதாஞ்சலி ராவ் அப்படி என்ன செய்தார்?


கீதாஞ்சலி ராவ் ஒரு இளம் விஞ்ஞானி. போதைப் பொருளுக்கு அடிமையாகும் பிரச்சனை மற்றும் சைபர் புல்லியிங் ஆகியவற்றில் இருந்து மக்களை காப்பாற்ற அவர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஒரு செயல்முறையை உருவாக்கியுள்ளார். கீதாஞ்சலியின் புதிய கண்டுபிடிப்பு ஒரு செலயியாகும் (App). இது சைபர் புல்லியிங் பற்றி கண்டறிய மெஷின் லர்ணிங் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது.


கீதாஞ்சலி 15 வயதிலேயே தண்ணீரில் லெட்டின் அளவைக் கண்டறியும் ஒரு சென்சரை உருவாக்கினார். இதன் மூலம் தண்ணீரில் உள்ள ஈயத்தின் அளவை எளிதில் கண்டறிய முடியும். அவர் தனது கண்டுபிடிப்புகளில் அதிக விலை கொண்ட சாதனங்களையும் பயன்படுத்தவில்லை. மொபைல் (Mobile) போல் தோற்றமுடைய சாதனத்திற்கு 'டெதிஸ்' என்று கீதாஞ்சலி பெயரிட்டுள்ளார். இந்த சாதனத்தை சில நொடிகள் தண்ணீரில் வைத்த பிறகு, அது தண்ணீரில் உள்ள ஈயத்தின் அளவைக் கூறுகிறது.


அமெரிக்க விஞ்ஞானிகள் பயனடைவார்கள்


கீதாஞ்சலி ராவின் இந்த கண்டுபிடிப்பு குறித்து அமெரிக்க விஞ்ஞானிகளும் பணியாற்றி வருகின்றனர். உண்மையில், அமெரிக்காவின் பல இடங்களில், தண்ணீரில் ஈயத்தின் அளவு மிக அதிகமாக உள்ளது. இதுவரை அதை அளவிட மிகவும் சிக்கலான முறை பயன்படுத்தப்பட்டுள்ளது. கீதாஞ்சலியின் கண்டுபிடிப்பிலிருந்து இப்போது அமெரிக்க (America) விஞ்ஞானிகள் பயனடையலாம்.



ALSO READ: Online hearing-ல் ஷர்ட் இல்லாமல் திரையில் தோன்றிய lawyer: கண்டித்த SC நீதிபதிகள்


5 ஆயிரம் குழந்தைகளில் கீதாஞ்சலி தேர்வு செய்யப்பட்டார்


டைம் பத்திரிகை (Times Magazine) முதன்முறையாக கிட் ஆஃப் தி இயர் விருதுக்கு பரிந்துரைகளைக் கோரியிருந்தது. இதற்காக சுமார் 5000 குழந்தைகள் தேர்வு செய்யப்பட்டனர். அதில் கீதாஞ்சலி முதல் இடத்தைப் பெற்றுள்ளார். கீதாஞ்சலி சமீபத்தில்தான் அமெரிக்காவின் சிறந்த இளம் விஞ்ஞானி என்ற விருதைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.



டைம் கவர் பேஜில் கீதாஞ்சலி


டைம் பத்திரிகையின் அட்டைப் பக்கத்தில், கீதாஞ்சலி ராவ், ஒரு வெள்ளை லேப் கோட் அணிந்து கையில் ஒரு பதக்கத்துடன் காணப்படுகிறார்.


ஏஞ்சலினா ஜோலி கீதாஞ்சலியை பேட்டி கண்டார்


ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் ஏஞ்சலினா ஜோலி (Angelina Jolie) டைம் பத்திரிகைக்காக கீதாஞ்சலியை பேட்டி கண்டார். ஏஞ்சலினா, “வீடியோ சேட்டில் கூட அவரது புத்திக்கூர்மையும் இளைஞர்களுக்கு ஊக்கமளிக்கும் உறுதியும் தெளிவாகத் தெரிந்தது. அனைத்து பிரச்சனையையும் சரிசெய்ய வீணாக முயற்சிக்காதீர்கள். எதில் உங்களுக்கு ஈடுபாடும் திறமையும் அதிகம் உள்ளதோ, அதில் கவனம் செலுத்துங்கள் என்று அவர் கூறுகிறார்” என்று எழுதியுள்ளார். 


ALSO READ: யோகா செய்யும் அனுஷ்கா, ஆதரவாய் அருகில் விராட்: viral ஆகி இதயங்களைக் கவர்ந்த pic!!


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR