சமையல் கலை போட்டியான மாஸ்டர்ஷெஃப் ஆஸ்திரேலியாவின் சீசன் 13 முடிவடைந்து விட்டது. இதன் வெற்றியாளர் அறிவிக்கப்பட்டுள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜஸ்டின் நாராயண் மாஸ்டர்ஷெஃப் ஆஸ்திரேலியாவின் வெற்றியாளராகி உள்ளார். 


இந்த வெற்றியின் மூலம் அவர் அனைவரையும் பெருமைப்படுத்தியுள்ளார். பிரஷர் டெஸ்டில், கிஷ்வர் சவுத்ரி மற்றும் பீட் கேம்பெல் ஆகிய இரு இறுதிப் போட்டியாளர்களை தோற்கடித்து அவர் கோப்பையை வென்றார்.


வெற்றிக்குப் பிறகு, அவர் தனது இன்ஸ்டாகிராம் (Instagram) பதிவில், தன்னை ஆதரித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.



"உங்களை நம்பும் நபர்களை அருகில் வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் மீது நம்பிக்கை கொள்ளுங்கள். கடினமாகச் செயல்படுங்கள். நீங்களே உங்களை ஆச்சரியப்படுத்துவீர்கள். இதை யார் படித்தாலும், நான் உங்கள் மீது அன்பு கொண்டுள்ளேன் என்பதை நினைவில் கொள்ளுங்கள்." என்று அவர் எழுதியுள்ளார். 


இதனோடு அவர்  இறுதி எபிசோடின் புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார். வெகுமதியைப் பொறுத்தவரை, ஜஸ்டின் மாஸ்டர்ஷெஃப் கோப்பையுடன் 250,000 அமெரிக்க டாலர் (சுமார் ரூ .1.86 கோடி) பரிசுத் தொகையை பெற்றதாக கூறப்படுகிறது.


ALSO READ: Masterchef Tamil நிகழ்ச்சியின் தொகுப்பாளராகிறார் விஜய் சேதுபதி: ரசிகர்கள் குதூகலம்!!  


ஜஸ்டின் வெற்றி பற்றிய செய்தி மாஸ்டர்ஷெஃப் (Masterchef) ஆஸ்திரேலியாவின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் அறிவிக்கப்பட்டது. போட்டியை வென்றவுடன் ஜஸ்டின் அடைந்த மகிழ்ச்சி, குதூகலம் ஆகிய அனைத்து உணர்ச்சிகளையும் வெளிக்காட்டும் வீடியோ ஒன்றும் அந்த பதிவில் பகிரப்பட்டுள்ளது. 


"ஜஸ்டின் நாராயணன் இப்போது மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளார் என்று கூறினால் அது மிகையல்ல” என்று அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது. தான் வெற்றியாளராக அறிவிக்கபட்ட பின்னர் ஜஸ்டின் நாராயணால் தனது மகிழ்ச்சியையும் சந்தோஷத்தையும் கட்டுப்படுத்த முடியவில்லை.


இது தனக்கு கிடைத்த மிகப்பெரிய மகிழ்ச்சியான அனுபவம் என்று அவர் கூறினார். "நடுவர்கள் மற்றும் பிற போட்டியாளர்களுக்கு மிகப்பெரிய நன்றி. இது எனது வாழ்க்கையின் மிகச்சிறந்த அனுபவம்" என்று அவர் கூறினார்.


மாஸ்டர்ஷெஃப் ஆஸ்திரேலியாவின் 13 ஆவது சீசன் மிகவும் பிரபலமான சீசனாக இருந்தது. குறிப்பாக இந்தியாவில் இந்த நிகழ்ச்சி பற்றி அதிகம் பேசப்பட்டது. ஜஸ்டின் நாராயணனைத் தவிர, இந்த நிகழ்ச்சியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மற்றொரு போட்டியாளரான தெபிந்தர் சிபரும் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமாக இருந்தார். மற்ற மூன்று இறுதிப் போட்டியாளர்களில் ஒருவரான கிஷ்வர் சவுத்ரி, நிகழ்ச்சியின் போது நடுவர்களைக் கவர பல இந்திய மற்றும் வங்காள உணவு வகைகளை சமைத்து அசத்தினார்.


ALSO READ: ஆஸ்திரேலியாவை தாக்கும் ‘எலிப்படை’; இந்தியாவிடம் ‘விஷம்’ கேட்டு கோரிக்கை 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR