ஆஸ்திரேலியாவை தாக்கும் ‘எலிப்படை’; இந்தியாவிடம் ‘விஷம்’ கேட்டு கோரிக்கை

ஆஸ்திரேலியாவில் லட்சக்கணக்கான எலிகள் படை, பயிர்களை தாக்கி வருவதால், பெரும் நெருக்கடியை எதிர்கொள்கிறது. இந்த நெருக்கடியிலிருந்து வெளியேற  இந்தியாவின் உதவியை நாடியுள்ளது.  

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : May 30, 2021, 07:01 PM IST
  • எலிகளை கொல்லும் விஷத்தை அனுப்பி வைக்குமாறு ஆஸ்திரேலியா இந்தியாவிடம் கோரியுள்ளது
  • ஆஸ்திரேய விவசாயிகள் வரலாறு காணாத எலித் தொல்லையால் பாதிக்கபப்ட்டுள்ளனர்.
  • லட்சக்கணக்கான எலிகள் பயிர்களை தாக்கி அழித்து வருகின்றன
ஆஸ்திரேலியாவை தாக்கும் ‘எலிப்படை’; இந்தியாவிடம் ‘விஷம்’ கேட்டு கோரிக்கை title=

சிட்னி: பெரும்பாலான வீடுகளில் எலித் தொல்லை உண்டு. எலிகள்  எண்ணிக்கை மிக அதிகம் இருந்தால், அந்த பகுதியில் மக்கள் வாழ்வது கடினம்.

ஆஸ்திரேலியா எலிகள் படை தாக்குதலால் நெருக்கடியை எதிர்கொள்கிறது. லட்சக்கணக்கான எலிகள் படையெடுத்து வந்து அங்குள்ள விவசாயிகளின் வாழ்க்கையை அழித்து வருகின்றன. எலிகள் நன்றாக விளைந்த பயிர்களை அழித்து வருகின்றன. நிலைமையை சமாளிக்க ஆஸ்திரேலியா இப்போது இந்தியாவிடம் உதவி கோரியுள்ளது.

Bromadiolone  விஷத்தை  அனுப்புமாறு ஆஸ்திரேலியா இந்தியாவிடம் கோரிக்கை

எலிகளை கொல்ல விஷம் கொடுக்குமாறு ஆஸ்திரேலியா இந்தியாவிடம் கோரியுள்ளது.  அதிக பாதிப்பு உள்ள ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் இது பயன்படுத்தப்படும். இந்த வகை விஷம் ஆஸ்திரேலியாவில் தடை செய்யப்பட்டுள்ளது. எனவே, இந்தியாவிடம் இந்த விஷத்தை அனுப்பி வைக்குமாறு கோரியுள்ளது

ALSO READ | இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் - கேரி சைமண்ட்ஸ் ரகசிய திருமணம்

ஆஸ்திரேலியா (Australia) நியூ சவுத் வேல்ஸ் அரசு இந்தியாவிடம் இருந்து 5 ஆயிரம் லிட்டர் ப்ரோமாடியோலோன் (Bromadiolone) விஷத்தை கேட்டுள்ளது. உலகில் எலிகளைக் கொல்ல மிகவும் ஆபத்தான விஷம் ப்ரோமாடியோலோன் என்று மாநில விவசாய அமைச்சர் ஆடம் மார்ஷல் கூறினார். இந்த விஷம் அனைத்து எலிகளையும் 24 மணி நேரத்திற்குள் அழிக்கக்கூடும்.

தொற்றுநோயைத் தடுக்க நிதி ஒதுக்கீடு

இதனுடன், எலிகள் (எலிகள்) இறப்பதால் ஏற்படும் தொற்றுநோயைத் தடுக்க மாநில அரசு 40 மில்லியன் டாலர் தொகையையும் வெளியிட்டுள்ளது. எலிகளைக் கொல்ல மக்கள் பல வகையான பூச்சிக்கொல்லிகளை கண்மூடித்தனமாக பயன்படுத்துகின்றனர். நாய்கள், பூனைகள் போன்ற செல்லப்பிராணிகளும் இதன் காரணமாக கொல்லப்படுகின்றன.

எலிகள் கொல்லப்படுவதன் காரணமாக பிளேக் பரவும் என்ற அச்சத்தில் ஆஸ்திரேலியாவில் பலர் விஷம் பயன்படுத்துவதை ஆதரிக்கவில்லை. இயற்கையான  முறையில் பிரச்சினையை சமாளிக்க வேண்டும் என்று அவர்கள் கூறுகிறார்கள்.

குடி நீர் மாசுபடுகிறது

எலிகள் மிக அதிகமாக இருப்பதால் மக்களின் குடிநீர் மாசுபடுகிறது. பல இடங்களில் தூங்கிக் கொண்டிருக்கும் மக்களை கூட எலிகள் கடித்து விடுவதாக கூறப்படுகிறது

ALSO READ | மெகுல் சோக்ஸியை அழைத்து வர பறந்த தனி விமானம்; ஆன்டிகுவா பிரதமர் கூறுவது என்ன

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News