கலிபோர்னியாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஆதித்யா சிங், சிகாகோவின் ஓ'ஹேர் சர்வதேச விமான நிலையத்தில் சுமார் மூன்று மாதங்களாக மறைந்து இருந்ததாக கண்டறியப்பட்டு அதிகாரிகளால் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அவர் கொடிய கொரோனா வைரஸுக்கு (Coronavirus) ஆளாக நேரிடும் என்ற அச்சத்தால் அங்கு மறைந்திருந்ததாக கூறியுள்ளார்.


36 வயதான சிங், விமான நிலையத்தின் தடைசெய்யப்பட்ட பகுதிகளில் நடமாடி மோசமான குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகவும் திருட்டு குற்றச்சாட்டிலும் உள்ளூர் அதிகாரிகளால் காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்றும் அரசாங்க வக்கீல்கள் தெரிவித்தனர்.


அதிகாரிகளின் கூற்றுப்படி, சிங் அக்டோபர் 19 ஆம் தேதி ஓ'ஹேர் விமான நிலையத்திற்கு (Airport) வந்தார். அதிலிருந்து கண்டுபிடிக்கப்படாமல், விமான நிலையத்தின் பாதுகாப்பு வளையத்தில் அவர் மறைந்திருந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு தலைமை தாங்கும் குக் கௌண்டி நீதிபதி சுசானா ஆர்டிசால், இந்த சம்பவத்தின் அதிர்ச்சியூட்டும் தன்மை காரணமாக அவர் கூறுபவற்றை உண்மை என பதிவு செய்ய முடியவில்லை என்று கூறினார்.


"நீங்கள் கூறுவதை நான் சரியாக புரிந்துகொண்டிருக்கும் பட்சத்தில், 2020 ஆம் ஆண்டு அக்டோபர் 19 முதல் ஜனவரி 16 வரை ஓ'ஹேர் விமான நிலைய முனையத்தின் பாதுகாப்பான பகுதிக்குள் ஒரு அங்கீகரிக்கப்படாத, இங்கு வேலை செய்யாத நபர் வசித்துக்கொண்டிருப்பதாக என்னிடம் கூறுகிறீர்கள். நீங்கள் கண்டறியப்படவில்லையா? நான் நீங்கள் கூறுவதை இன்னும் சரியாக புரிந்துகொள்ள விரும்புகிறேன்.” என்று ஆர்டிஸ் கூறினார்.


ALSO READ: வன்முறை பதட்டங்களுக்கு மத்தியில் Jo Biden பதவியேற்பு விழாவுக்கு தயாராகும் America


மூன்று மாதங்கள் வெற்றிகரமாக தலைமறைவாக இருந்த பின்னர், யுனைடெட் ஏர்லைன்ஸின் இரண்டு ஊழியர்கள் அவரை அணுகி, அவரை விசாரித்து, ​​அவரது அடையாள அட்டையை கோரியபோது சிங் சிக்கினார். சிங், நயவஞ்சகமாக, அவர் அணிந்திருந்த விமான நிலைய ஐடி பேட்ஜைக் காண்பித்தார். இந்த பேட்ஜ் ஒரு செயல்பாட்டு மேலாளருடையது என்றும் அவர் அக்டோபர் 26 அன்று இதை காணவில்லை என புகார் அளித்துள்ளார் என்றும் பின்னர் தெரிய வந்தது.


யுனைடெட் ஏர்லைன்ஸ் ஊழியர்கள், இந்த சம்பவத்தை அடையாளம் கண்டு, போலீசாருக்கு தகவல் கொடுத்தனர், பின்னர் விமான நிலையத்தின் கேட் F-12 க்கு அருகிலுள்ள டெர்மினல் 2 இலிருந்து சில மணி நேரத்தில் அவரை காவலில் எடுத்து விசாரித்தார்.


ஹாஸ்பிடாலிடியில் முதுகலைப் பட்டம் பெற்ற சிங் ஒரு தெளிவான பதிவைக் கொண்டுள்ளார். மேலும் எந்தவொரு குற்றச் சம்பவங்களும் அவர் பெயரில் இதுவரை பதிவானதில்லை என்று உதவி பொதுப் பாதுகாவலர் கோர்ட்னி ஸ்மால்வுட் கூறுகிறார். அவர் வேலையில்லாமல் இருப்பதாகவும், லாஸ் ஏஞ்சல்ஸ் (Los Angeles) புறநகர்ப் பகுதியான ஆரஞ்சில் தற்போது வசித்து வந்தார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


சிங் தன்னை விடுதுலை செய்வதற்கான கட்டணமாக $ 1,000 செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார். இந்த விமான நிலையத்தின் ‘நோ எண்ட்ரி’ பட்டியலில் அவரது பெயர் சேர்க்கப்பட்டு இங்கு அவர் நுழைய நிரந்தர தடை விதிக்கப்பட்டுள்ளது.


"அவர் கூறும் உண்மைகளும் இந்த சூழ்நிலைகளும் மிகவும் அதிர்ச்சியை அளிக்கின்றன” என்று நீதிபதி ஓரிட்ஸ் கூறினார். "அவர் விமான நிலையத்தின் பாதுகாப்பான பகுதியில் ஒரு போலி ஐடி பேட்ஜுடன் இருந்திருக்கிறார். மக்கள் பாதுகாப்பாக பயணிக்க விமான நிலையங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நிலையில், இவர் இப்படி ஏமாற்றி இருப்பது சரியல்ல. அவரது செயல்கள் அவரை சமூகத்திற்கு குந்தகம் விளைவிக்கக்கூடிய நபராக சந்தேகிக்க வைக்கின்றன” என்று அவர் மேலும் தெரிவித்தார்.


ALSO READ: காதல் மலர்ந்தது 1950-ல், கல்யாணம் ஆனது 2020-ல்: இது ஒரு அழகிய அதிசய காதல் கதை!!


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR