புதுடெல்லி: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்குப் பிறகு, பெண்கள் அணி டிரெஸ்ஸிங் ரூமில் இந்த வெற்றியை குதூகலமாக கொண்டாடியது. இதற்கிடையில், இந்திய மகளிர் அணியின் சில வீராங்கனைகள் ஒரு பாடலுக்கு நடனமாடினர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சமீபத்தில், இந்திய ஆண்கள் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர்களான ரவிச்சந்திரன் அஸ்வின், ஹார்திக் பாண்ட்யா மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் ஆடிய அதே பாடலுக்குதான் நடனம் ஆடினர். மகளிர் அணியின் நடனத்தின் இந்த வீடியோ சமூக ஊடகங்களில் விரைவாக வைரலாகி வருகிறது.


'மாஸ்டர்' திரைப்படத்தின் பாடலுக்கு நடனம்


இந்திய மகளிர் அணியின் வீராங்கனைகள் நடிகர் விஜய்யின் 'மாஸ்டர்' (Master) படத்தின் பாடலுக்கு குத்தாட்டம் போட்டனர். இந்த வீடியோவில், வேதா கிருஷ்ணமூர்த்தி, ஆகான்ஷா கோஹ்லி, வி.ஆர்.வனிதா, மம்தா மாபென் ஆகியோர் நடனமாடுவதைக் காண முடிகிறது. இந்த வீடியோவை வேதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் கடுமையாக வைரலாகி வருகிறது.



ALSO READ: IND vs ENG Victory: அஸ்வினின் மனைவியின் காதல் நிறை டிவிட்டர் Post


அஸ்வின், குல்தீப்-ஹார்திக் உடன் நடனமாடினார்


இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான ரவிச்சந்திரன் அஸ்வின் (R Ashwin), ஹார்திக் பாண்ட்யா மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் இந்த பாடலுக்கு நடனமாடினர். அப்போது அஸ்வின் தனது நடனத்தின் வீடியோவை சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டார். அது மிகவும் வைரலாகியது. அஸ்வின், குல்தீப் மற்றும் ஹார்திக் ஆகியோருக்குப் பிறகு, இப்போது பெண்கள் அணியும் தங்கள் வெற்றியை இந்த பாடலுக்கு நடனமாடி கொண்டாடியுள்ளனர்.



பெண்கள் அணியின் வலுவான ஆட்டம்


தென்னாப்பிரிக்க மகளிர் அணிக்கு எதிரான தொடரின் முதல் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்த பிறகு, இந்திய மகளிர் அணி இரண்டாவது போட்டியில் அற்புதமாக விளையாடியது. இரண்டாவது ஒருநாள் போட்டியில், இந்திய பெண்கள் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அற்புதமான வெற்றியைப் பெற்றது. இந்த போட்டியில், முதலில் ஆடிய தென்னாப்பிரிக்க அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 157 ரன்கள் மட்டுமே எடுத்தது.


இந்தியாவைப் (Team India) பொறுத்தவரை, மூத்த வேகப்பந்து வீச்சாளர் ஜூலன் கோஸ்வாமி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இரண்டாவதாக ஆடிய இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிலேயே வெற்றியைப் பெற்றது. ஸ்மிருதி மந்தனாவின் ஆட்டமிழக்காமல் 80 ரன்களை எடுத்தார்.


ALSO READ: IND vs Eng: இங்கிலாந்தை வீழ்த்தி 317 ரன் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி!!


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR