ICC Test rankings: அஸ்வின் டாப் -5 ஆல்ரவுண்டர், ரோஹித்-பந்த் பேட்ஸ்மேன் வரிசையில்…

இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான டெஸ்ட் போட்டித் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அற்புதமாக ஆடி வெற்றி பெற்றது. அதன் ஏதிரொலியாக இந்திய அணியின் ரோஹித் சர்மா, ரவிச்சந்திரன் அஸ்வின், ரிஷப் பந்த் ஆகியோர் டெஸ்ட் தரவரிசையில் முன்னேறியுள்ளனர்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 17, 2021, 05:37 PM IST
  • அஸ்வின் டாப் -5 ஆல்ரவுண்டர்
  • ரோஹித் ஷர்மாவும் தரவரிசையில் முன்னேறினார்
  • பந்த் பேட்ஸ்மேன் வரிசையில் முன்னேறினார்
ICC Test rankings: அஸ்வின் டாப் -5 ஆல்ரவுண்டர், ரோஹித்-பந்த் பேட்ஸ்மேன் வரிசையில்… title=

ICC Test rankings: இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான டெஸ்ட் போட்டித் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அற்புதமாக ஆடி வெற்றி பெற்றது. அதன் ஏதிரொலியாக இந்திய அணியின் ரோஹித் சர்மா, ரவிச்சந்திரன் அஸ்வின், ரிஷப் பந்த் ஆகியோர் டெஸ்ட் தரவரிசையில் முன்னேறியுள்ளனர்.

இங்கிலாந்துக்கு எதிராக சென்னை எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் விளையாடிய இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வின், ரோஹித் சர்மா ஆகியோர் சதம் அடித்தனர். இதனால் ஐ.சி.சி டெஸ்ட் தரவரிசையில் அவர்களுக்கு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

இளம் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன் ரிஷாப் பந்த் தரவரிசையில் சிறந்த இடத்திற்கு சென்றுள்ளார். சென்னை டெஸ்டில் 106 ரன்கள் எடுத்த அஸ்வின், ஐந்து விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். இது அவரது தரவரிசையை உயர்த்தியது. ஆல்ரவுண்டர்களின் பட்டியலில் முதல் ஐந்து இடங்களுகுள் வந்துவிட்டார்.   336 மதிப்பெண் பெற்றுள்ள அஸ்வின், டெஸ்ட் ஆல்ரவுண்டர்களின் பட்டியலில் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளார்.

Also Read | திருமணத்தில் குத்தாட்டம் போட்ட தோனியின் மனைவி சாக்ஷி..!

ஆல்-ரவுண்டர்ஸ் பட்டியலில் மேற்கு இந்திய டெஸ்ட் கேப்டன் ஜேசன் ஹோல்டர் (Jason Holder) தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். அஸ்வின் மற்றும் இந்தியாவின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் இரண்டாவது இடத்தில் உள்ளனர்.

சென்னையில் இந்தியாவை ஆதிக்கம் செய்ய முடியாத இங்கிலாந்து அணியின் பென் ஸ்டோக்ஸ் (Ben Stokes) மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளார். நான்காவது இடத்தில் பங்களாதேஷ் வீரர் ஷாகிப் அல் ஹசன் (Shakib Al Hasan) உள்ளார்.

IPL 2021 Auction Rules: 2021 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் ஏல விதிகள் என்ன சொல்கின்றன? ஐபிஎல் 14 வது சீசன் ஏலத்தில் அனைத்து அணிகளும் கீழே குறிப்பிட்டுள்ள விதிகளை கவனத்தில் கொள்ள வேண்டும்,

Also Read | IND vs Eng: இங்கிலாந்தை வீழ்த்தி 317 ரன் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி!!

பேட்ஸ்மேன்களின் பட்டியல் குறித்து பேசிய இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித், இங்கிலாந்துக்கு எதிராக 231 பந்துகளில் 161 ரன்கள் எடுத்து 14 வது இடத்தை பிடித்துள்ளார். விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன் ரிஷப் பந்த், தனது தொழில் வாழ்க்கையின் முதல் முறையாக 11வது இடத்தை எட்டியுள்ளார்.

இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட், தர வரிசையில் ஒரு இடம் முன்னேறி நான்காவது இடத்தை பிடித்திருக்கிறார். முதல் 3 இடங்களில் கேன் வில்லியம்சன், ஸ்டீவ் ஸ்மித் மற்றும் மார்னஸ் லாபுஷேன் ஆகியோர் உள்ளனர். இந்திய கேப்டன் விராட் கோலி ஐந்தாவது இடத்தில் உள்ளார்.

Also Read | Master திரைப்படத்தின் வாத்தி கம்மிங் பாடலுக்கு அஸ்வின் ஆட்டம் வீடியோ Viral 

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News